புது பெருங்களத்துாரில் குடிசையில் தீ விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புது பெருங்களத்துாரில் குடிசையில் தீ விபத்து

Added : செப் 09, 2021
Share
பீர்க்கன்காரணை--பெருங்களத்துாரில் குடிசைகள் தீப்பற்றி, எரிந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.தாம்பரம் அடுத்த புது பெருங்களத்துார், ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர், ஜெய்கணேஷ், 30.இவருக்கு, சொந்தமாக அதே பகுதியில் உள்ள, ஆறு சிறிய கூரை வீடுகள் உள்ளன. இதில், ஒரு வீட்டில், நேற்று காலை, திடீரென தீப்பிடித்தது.சற்று நேரத்தில், மளமளவென பரவிய தீ, ஆறு குடிசைகளுக்கும்

பீர்க்கன்காரணை--பெருங்களத்துாரில் குடிசைகள் தீப்பற்றி, எரிந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.தாம்பரம் அடுத்த புது பெருங்களத்துார், ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர், ஜெய்கணேஷ், 30.இவருக்கு, சொந்தமாக அதே பகுதியில் உள்ள, ஆறு சிறிய கூரை வீடுகள் உள்ளன. இதில், ஒரு வீட்டில், நேற்று காலை, திடீரென தீப்பிடித்தது.சற்று நேரத்தில், மளமளவென பரவிய தீ, ஆறு குடிசைகளுக்கும் பரவியது. இது குறித்து, தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், தீயை பகுதி மக்கள் முற்றிலும் அணைத்தனர்; இந்த விபத்தில், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.இது குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X