ரயில் தாமதமானால் பயணியருக்கு இழப்பீடு!

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி : 'உரிய விளக்கமின்றி ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டால் பயணியருக்கு ரயில்வே நிர்வாகம் இழப்பீடு தொகை அளிக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.ராஜஸ்தானை சேர்ந்த நபர் கடந்த 2016ல் குடும்பத்துடன் ரயிலில் ஜம்மு சென்றார். அந்த ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக ஜம்மு சென்றடைந்தது. இதனால் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு செல்ல அவர்கள் முன்பதிவு செய்திருந்த
Train, Supreme Court, Railways,compensation

புதுடில்லி : 'உரிய விளக்கமின்றி ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டால் பயணியருக்கு ரயில்வே நிர்வாகம் இழப்பீடு தொகை அளிக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜஸ்தானை சேர்ந்த நபர் கடந்த 2016ல் குடும்பத்துடன் ரயிலில் ஜம்மு சென்றார். அந்த ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக ஜம்மு சென்றடைந்தது. இதனால் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு செல்ல அவர்கள் முன்பதிவு செய்திருந்த விமானத்தை தவறவிட்டனர். இதையடுத்து வாடகை காரில் அதிக தொகை செலவு செய்து ஸ்ரீநகர் சென்றடைந்தனர். மேலும் தால் ஏரியில் படகு சவாரிக்கான முன்பதிவும் ரத்தானது.

ரயில் தாமதமாக இயக்கப்பட்டதால் குடும்பத்தினருடன் கடும் அவதிக்கு உள்ளான அந்த நபர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு மன்றத்தில் முறையீடு செய்தார். பாதிக்கப்பட்ட நபருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு நுகர்வோர் குறை தீர்ப்பு மன்றம் உத்தரவிட்டது.


latest tamil news



இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரயில்வே நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இது போட்டி நிறைந்த காலகட்டம். பொது போக்குவரத்து துறையில் தனியாருடன் போட்டி போட வேண்டுமானால் ரயில்வே நிர்வாகம் பணி செய்யும் முறையை மேம்படுத்த வேண்டும். அதிகாரிகளின் கருணையில் பயணியர் இருக்க முடியாது. தவறுகளுக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டும்.

இந்திய ரயில்வேயில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்த தாமதத்திற்கு சரியான விளக்கங்கள் இல்லை. உரிய விளக்கமின்றி ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டால் பயணியருக்கு ரயில்வே நிர்வாகம் இழப்பீடு தொகை அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ராஜஸ்தானை சேர்ந்த பயணிக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும் உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
09-செப்-202116:27:36 IST Report Abuse
DVRR அனாவசியமான ஒன்று. கொஞ்சம் லேட்டாகும். குடியா முழுகிப் போய்விட்டது அப்போ பிளேனில் செல்
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
09-செப்-202113:34:03 IST Report Abuse
MANIAN K சலுகைகள் இலவசங்கள் குறைந்த கட்டணம் எல்லாம் கொடுத்து இழப்பீடு சாத்தியமில்லை.
Rate this:
Cancel
M.S.Jayagopal - Salem,இந்தியா
09-செப்-202112:56:57 IST Report Abuse
M.S.Jayagopal அரசு மற்றும் அரசு அமைப்புகளில் வேலை செய்வோருக்கு திறமையும் பயமும் நேர்மையும் எந்தகாலத்திலும் இருக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X