கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி சொத்து மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி சொத்து மீட்பு

Added : செப் 09, 2021
Share
சென்னை--வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 5 கோடி ரூபாய் மதிப்பிலான, மனையுடன் கூடிய வணிக வளாகம், சுவாதீனம் பெற்றப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது.சென்னை வில்லிவாக்கத்தில், அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலுக்கு சொந்தமான, 3,627 சதுர அடி மனை வணிக வளாகம் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ளது.கோவில் ஆவணங்களின் படி குமாரசாமி என்பவருக்கு

சென்னை--வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 5 கோடி ரூபாய் மதிப்பிலான, மனையுடன் கூடிய வணிக வளாகம், சுவாதீனம் பெற்றப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது.சென்னை வில்லிவாக்கத்தில், அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலுக்கு சொந்தமான, 3,627 சதுர அடி மனை வணிக வளாகம் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ளது.கோவில் ஆவணங்களின் படி குமாரசாமி என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. ஆனால், அந்த மனையை செந்தில்குமார் என்பவருக்கு மேல் வாடகைக்கு விட்டு விட்டு, கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையை, குமாரசாமி செலுத்தவில்லை. இதையடுத்து, இடத்தை அனுபவித்து வந்த செந்தில்குமார், கோவிலுக்கு வாடகை செலுத்துவதாக கூறினார். ஆனால், நீண்ட நாட்களாக செலுத்த வேண்டிய நிலுவை தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தினார். பல சந்தர்ப்பம் அளித்தும் வாடகை நிலுவையை செலுத்த முன்வராததால், கோவில் மனையில் இருந்து அவரை வெளியேற்ற, 2018ல் அறநிலையத்துறை இணை கமிஷனர் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதை எதிர்த்து, செந்தில்குமார் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அறநிலையத்துறை கமிஷனர் நீதிமன்றத்தையே அணுகக் கூறி, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை இணைக் கமிஷனர் நீதிமன்றம், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.கோவில் மனையில், நான்கு கடைகள், 'பார்ட்டி ஹால்', முதல் தளத்தில், உடற்பயிற்சி கூடம், இரண்டாவது தளத்தில், ஓய்வறை, குடோன் ஆகியவற்றுடன் வணிக வளாகமாக செயல்பட்டு வந்தது.சென்னை, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவிக் கமிஷனர் கவேனிதா முன்னிலையில், வருவாய், காவல் துறை உதவியுடன் ஆக்கிரமித்திருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டது.கோவிலுக்கு சுவாதீனம் எடுக்கப்பட்ட மனையின் மதிப்பு, 5 கோடி ரூபாய் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X