பொது செய்தி

தமிழ்நாடு

ஏரிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை

Added : செப் 09, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை--பல்லாவரம் நகராட்சியில் உள்ள ஏரிகளில், கழிவு நீர் கலப்பதை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.ஒவ்வொரு ஏரியிலும், கழிவு நீர் விடுவோர் குறித்த கணக்கெடுப்பு பணியை, நகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது. விதிமீறலுக்கு காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில்

குரோம்பேட்டை--பல்லாவரம் நகராட்சியில் உள்ள ஏரிகளில், கழிவு நீர் கலப்பதை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.ஒவ்வொரு ஏரியிலும், கழிவு நீர் விடுவோர் குறித்த கணக்கெடுப்பு பணியை, நகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது. விதிமீறலுக்கு காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில் நெமிலிச்சேரி ஏரி உள்ளது. இதை முறையாக பராமரிக்காததால், ஏரி நீர் மாசடைந்துள்ளதுடன், பொதுப்பணித் துறையினரின் அலட்சியத்தால், பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடியிருப்புகள் உருவாகியுள்ளன.மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, இந்த ஏரியில் படர்ந்திருந்த ஆகாய தாமரையை, ஏரி பாதுகாப்பு குழுவினர் அகற்ற துவங்கினர். இதை ஊக்கப்படுத்தும் விதமாக, பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ., கருணாநிதி, தன் ஒரு மாத ஊதியத்தை, வழங்கினார்.ஒரு மாதத்திற்கு மேலாக நடந்த பணியில், 100க்கும் மேற்பட்ட, லோடு ஆகாய தாமரை அகற்றப்பட்டது. எனினும், சுற்றுவட்டார பகுதி மக்களால், ஏரியில் கழிவு நீர் விடப்படுவதால், ஏரி நீர் மாசடைவது தடுக்க முடியாமல் உள்ளது. இதுகுறித்து, ஏரி பாதுகாப்பு குழுவினர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, கழிவு நீர் கலக்க காரணமாக இருந்த குழாய், நகராட்சி நிர்வாகத்தால் அடைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, பல்லாவரம் நகரத்தில் உள்ள ஏரிகளில், கழிவு நீர் விடுவோரை கணக்கெடுத்து, அதை தடுப்பதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது. ஒவ்வொரு ஏரியிலும், எத்தனை வீடுகளில் இருந்து கழிவு நீர் கலக்கிறது என்பதை கணக்கெடுத்து, அவற்றை தடுத்து, இணைப்புகளை, பாதாள சாக்கடையுடன் இணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கணக்கெடுப்பு பணி முடிந்ததும், விதிமீறலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை பாயும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்தும் பட்சத்தில், ஏரி நீர் மாசடைவதை முற்றிலும் தவிர்க்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். தவணை முறை வாய்ப்புநெமிலிச்சேரி ஏரியில், 112 வீடுகளின் கழிவு நீர் கலக்கிறது. அவற்றை கண்டுபிடித்து, 27 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மற்ற வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள், ஒரு வாரத்திற்குள் கழிவு நீர் விடுவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இதே போல், வீரராகவன் ஏரி, பல்லாவரம் பெரிய ஏரி மற்றும் கீழ்க்கட்டளை ஏரிகளிலும், கழிவு நீர் கலக்கும் வீடுகளை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏரிகளில் கழிவு நீர் கலப்பவர்கள், பாதாள சாக்கடை திட்ட இணைப்பை பயன்படுத்த வேண்டும். அவர்களின் வசதிக்காக, இணைப்புக்கான கட்டணத்தை தவணை முறையில் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.காந்திராஜ்கமிஷனர், பல்லாவரம் நகராட்சி.கமிஷனருக்கு பாராட்டுநெமிலிச்சேரி ஏரியை சுத்தம் செய்யும் பணி, 4ம் தேதி முடிந்தது. இரண்டு நாட்கள் கழித்து, ஏரியை பார்வையிட சென்றோம். அப்போது, ஒரு குழாய் வழியாக, ஏரியில் கழிவு நீர் கலக்கப்பட்டது. இது குறித்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரின் பார்வைக்கு எடுத்து சென்றோம். இதையடுத்து, கழிவு நீர் கலப்பது உடனடியாக நிறுத்தப்பட்டது. இது சம்மந்தமாக, நகராட்சி கமிஷனரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். கமிஷனரும், முக்கியத்துவத்தை உணர்ந்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அவரின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள். எனினும், இதை பெயரளவில் செய்யாமல், முழு மூச்சில் அமல்படுத்தினால், நீர்நிலைகளுக்கு புத்துயிர் ஊட்ட முடியும்.வி. சந்தானம், 83மக்கள் விழிப்புணர்வு மையம், குரோம்பேட்டை.தொலைநோக்கு பார்வை தேவைபல்லாவரம் பெரிய ஏரி, 198.93 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அரசியல் வாதிகளின் துணையோடு, 112. 58 ஏக்கரை ஆக்கிரமித்து குடியிருப்புகளாக மாற்றி விட்டனர். தற்போது, பல்லாவரம்- - துரைப்பாக்கம் சாலையில், வடக்கு பகுதியில் உள்ள ஏரியை, வேலி அமைத்து, ஆக்கிரமிக்கும் செயல் அரங்கேறி வருகிறது.இதே போல், 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட, பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள வீரராகவன் ஏரி, ஆக்கிரமிப்பால் குட்டைபோல் மாறிவிட்டது. இரண்டு ஏரிகளிலும், பல ஆண்டுகளாக குடியிருப்பு, தொழிற்சாலை, மருத்துவமனை, ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலக்கிறது. இதனால், தண்ணீர் மாசடைந்து, பச்சை நிறமாகிவிட்டது. நிலத்தடி நீர் கெட்டு, ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக, பல்லாவரம் ஏரி எதற்கும் பயன்படாத நிலையில் உள்ளது. கழிவு நீர் கலப்பு தடுப்பு நடவடிக்கை, பெயரளவுக்கு இல்லாமல், எதிர்கால சந்ததியினர் நலன் மற்றும் நீர்நிலைகளின் அவசியத்தை கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும் என, பொதுமக்கள், நீர்நிலை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X