சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் சில்மிஷம் தலைமை காவலர் கைது

Added : செப் 09, 2021
Share
Advertisement
போரூர்-இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போக்குவரத்து காவலரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.போரூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் குமரன், 50. இவர் அய்யப்பன்தாங்கலில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டார்.நேற்று முன்தினம் பணி முடிந்து, அதே பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார். அங்கு வந்த இரண்டு இளம்

போரூர்-இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போக்குவரத்து காவலரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.போரூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் குமரன், 50. இவர் அய்யப்பன்தாங்கலில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டார்.நேற்று முன்தினம் பணி முடிந்து, அதே பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார். அங்கு வந்த இரண்டு இளம் பெண்களில், ஒரு பெண்ணின் தோள் மீது கையை வைத்து, காவலர் குமரன் பேசியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், அந்த பெண் தன்னிடம் போக்குவரத்து காவலர் சில்மிஷம் செய்ததாக கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.மேலும், அந்த பெண்கள் போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போக்குவரத்து தலைமை காவலர் குமரன் மீது, பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போரூர் போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வந்த தோழி, உதவி கமிஷனர் ஒருவரின் மகள் என, போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X