பொது செய்தி

தமிழ்நாடு

11ல் குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
சென்னை--சென்னை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம், 11ம் தேதி நடக்க உள்ளது.இது குறித்து, சென் னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறைதீர் கூட்டம், ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக, கடந்தாண்டு ஏப்ரல் முதல் குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து,

சென்னை--சென்னை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம், 11ம் தேதி நடக்க உள்ளது.இது குறித்து, சென் னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறைதீர் கூட்டம், ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக, கடந்தாண்டு ஏப்ரல் முதல் குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, அரசு விதிமுறைகளை கடைப்பிடித்து, அனைத்து பகுதி அலுவலகத்திலும், இரண்டாவது சனிக்கிழமை குறைதீர் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம், அனைத்து குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களிலும், 11ம் தேதி, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.இந்த கூட்டம் நடைபெறும், ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும், ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமை வகிப்பார்.பொதுமக்கள், தங்கள் பகுதி குடிநீர், கழிவு நீர் சம்பந்தமான பிரச்னைகள், குடிநீர், கழிவு நீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களுக்கு, நேரில் மனு அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X