பொது செய்தி

தமிழ்நாடு

கண் தானம் செய்வதால் 60 லட்சம் பேருக்கு மறுவாழ்வு

Added : செப் 09, 2021
Share
Advertisement
சென்னை-''இந்தியாவில், 60 லட்சம் பேர் பார்வையற்றவர்களாகவும், 11 லட்சம் பேர், பார்வையிழந்து கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காகவும் காத்திருக்கின்றனர்.பொதுமக்கள் கண்தானம் செய்வதன் வாயிலாக அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும்,'' என, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் பிரகாஷ் கூறினார்.தேசிய கண்தான இருவார விழா, சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், ஆக., 25ம் தேதி

சென்னை-''இந்தியாவில், 60 லட்சம் பேர் பார்வையற்றவர்களாகவும், 11 லட்சம் பேர், பார்வையிழந்து கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காகவும் காத்திருக்கின்றனர்.பொதுமக்கள் கண்தானம் செய்வதன் வாயிலாக அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும்,'' என, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் பிரகாஷ் கூறினார்.தேசிய கண்தான இருவார விழா, சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், ஆக., 25ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது. சென்னை அரிமா கண் வங்கி அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம், தமிழக கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரசு கண் மருத்துவமனை இணைந்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.இதுகுறித்து, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் பிரகாஷ் கூறியதாவது:இந்தியாவில், 60 லட்சம் பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இதில், கருவிழி நோயால் பார்வையிழந்து, கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காக, 11 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.ஆண்டுக்கு, 75 ஆயிரம் முதல், 1 லட்சம் வரை, கருவிழிகள் தேவையாக உள்ளது. ஆனால், 22 ஆயிரம் தான், கண் தானம் வாயிலாக கிடைக்கிறது. அதில், தர பரிசோதனைக்கு பின், 40 முதல் 50 சதவீதம் தான் பயன்படுத்தப்படுகிறது. பிற கருவிழிகள் வேறு சில ஆய்வு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. எனவே, கண்தானம் செய்வதன் வாயிலாக, 60 லட்சம் பேருக்கும் மறுவாழ்வு அளிக்க முடியும். அனைத்து வயதினரும் கண்தானம் செய்யலாம். கண் கண்ணாடி அணிந்தவர்களும் செய்யலாம். ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, புற்றுநோயாளிகள் என, அனைவரும் கண் தானம் செய்யலாம்.கொடிய நோய்களான, எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, காலரா, விஷகாய்ச்சல், மூளைக்காய்ச்சல், வெறிநாய்க்கடி ஆகியவற்றில் இறந்தவர்களின் கண்களை மட்டுமே தானம் அளிக்க முடியாது. மற்ற அனைவரும் கண்தானம் செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X