பொது செய்தி

தமிழ்நாடு

சந்தன மரத்தில் 13 மி.மீ., உயர விநாயகர் சிலை: தேசிய விருது பெற்ற நுண் சிற்ப கலைஞர் சாதனை

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை- -விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தேசிய விருது பெற்ற நுண் சிற்ப கலைஞர் பரணியால் உருவாக்கப்பட்டுள்ள, 13 மில்லி மீட்டர் உயரம் கொண்ட, சந்தன மர விநாயகர் சிலை, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையைச் சேர்ந்தவர் நுண் சிற்ப கலைஞர் பரணி, 52. இவர், மர சிற்பங்கள் வடிவமைப்பதில் கைத்தேர்ந்தவர். குறிப்பாக, சந்தன மரம், அரிசியில் சிற்பங்களை
சந்தன மரத்தில் 13 மி.மீ., உயர விநாயகர் சிலை: தேசிய விருது பெற்ற நுண் சிற்ப கலைஞர் சாதனை

சென்னை- -விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தேசிய விருது பெற்ற நுண் சிற்ப கலைஞர் பரணியால் உருவாக்கப்பட்டுள்ள, 13 மில்லி மீட்டர் உயரம் கொண்ட, சந்தன மர விநாயகர் சிலை, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையைச் சேர்ந்தவர் நுண் சிற்ப கலைஞர் பரணி, 52. இவர், மர சிற்பங்கள் வடிவமைப்பதில் கைத்தேர்ந்தவர். குறிப்பாக, சந்தன மரம், அரிசியில் சிற்பங்களை வடிவமைப்பதில் பிரசித்தி பெற்றவர். இதற்காக பல்வேறு தேசிய, மாநில விருதுகளை பெற்றவர்.நாடு முழுதும், 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சந்தன மரத்தில், கலை நயத்துடன் கூடிய விநாயகர் சிற்பத்தை வடிவமைத்து உள்ளார்.இந்த சிலை, 13 மில்லி மீட்டர் உயரம் கொண்டது.

இதில், 2 மில்லி மீட்டர் உயரத்தில், விநாயகரின் வாகனமான மூஞ்சூரும் இடம் பெற்றுள்ளது. விநாயகரை கற்பக விருட்சத்தின் அடியில் அமர வைத்து, கற்பக விநாயகராக வடிவமைத்துள்ளார்.மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சிலை, இரண்டு மாத உழைப்பில் உருவாக்கி உள்ளார். இந்த சிலை, அண்ணாசாலையில் உள்ள, வி.டி.ஐ., விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட பல்வேறு விற்பனையகங்களில், காட்சிக்கு வைக்கப்பட்டது. இது, பார்வையாளர்கள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றது.

இது குறித்து, நுண் சிற்பக்கலைஞர் பரணி கூறியதாவது:சந்தன மரம், அரிசி ஆகியவற்றில் நுண் சிற்பங்களை பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறோம். தமிழகத்தில் ஏராளமான நுண் சிற்பக் கலைஞர்கள் உள்ளனர்.அவர்கள் வெளி உலகிற்கு தெரியாததால், அவர்களின் கைத்திறன் அழிந்து வருகிறது. நலிவடைந்த நுண் கலைஞர்களை, மத்திய - மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.தலைவர்களுக்கு பரிசு!பரணியின் கைவண்ணத்தில் உருவான ஏராளமான சிற்பங்கள், உள்நாட்டு தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரையிலான பிரபலங்களுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பிலும், பரணியின் கைவண்ணத்தில் உருவாக சிற்பங்கள் பரிசளிக்கப்பட்டுள்ளன. அதே போல், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் இந்திய வருகையின் போது, மத்திய அரசின் சார்பில், பரணியின் கைவண்ணத்தில் உருவான சிற்பம் பரிசளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nallavan - manigramam,பஹ்ரைன்
09-செப்-202123:18:15 IST Report Abuse
nallavan மிகவும் பாராட்டுக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X