பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : செப் 09, 2021
Share
Advertisement
திருத்தணி-திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரியில், நடப்பாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பில் முதல் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு, கடந்த மாதம், 26ம் தேதி முதல், இம்மாதம், 2ம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது.இதையடுத்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 13ம் தேதி முதல், மூன்று நாட்கள் நடக்கிறது.கல்லுாரி முதல்வர் விஜயலட்சுமி கூறுகையில், ''13ம் தேதி, பி.எஸ்சி., இயற்பியல்,

திருத்தணி-திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரியில், நடப்பாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பில் முதல் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு, கடந்த மாதம், 26ம் தேதி முதல், இம்மாதம், 2ம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது.இதையடுத்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 13ம் தேதி முதல், மூன்று நாட்கள் நடக்கிறது.கல்லுாரி முதல்வர் விஜயலட்சுமி கூறுகையில், ''13ம் தேதி, பி.எஸ்சி., இயற்பியல், கணிதம், கணினி அறிவியல் மற்றும் பி.சி.ஏ.,; 14ம் தேதி பி.காம் பொது, பி.காம் சி.எஸ்., பி.பி.ஏ., பி.ஏ. வரலாறு, பொருளதாரம்; 15ம் தேதி, பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். இதில், 'கட்ஆப்' 251 மதிப்பெண்கள் மேல், 300 மதிப்பெண்களுக்குள் பெற்றவர்கள் பங்கேற்கலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X