மடம் கிராமத்தில் மின் மாற்றி அமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மடம் கிராமத்தில் மின் மாற்றி அமைப்பு

Added : செப் 09, 2021
Share
உத்திரமேரூர்-கருவேப்பம்பூண்டி ஊராட்சி, மடம் கிராமத்தில், புதிதாக அமைக்கப்பட்ட 'டிரான்ஸ்பார்மர்' எனப்படும் மின் மாற்றி நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.உத்திரமேரூர் ஒன்றியம், கருவேப்பம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மடம் கிராமத்திற்கு என, டிரான்ஸ்பார்மர் எனப்படும் மின் மாற்றி இல்லாததால், இக்கிராமத்திற்கு குறைந்த மின்னழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு

உத்திரமேரூர்-கருவேப்பம்பூண்டி ஊராட்சி, மடம் கிராமத்தில், புதிதாக அமைக்கப்பட்ட 'டிரான்ஸ்பார்மர்' எனப்படும் மின் மாற்றி நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.உத்திரமேரூர் ஒன்றியம், கருவேப்பம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மடம் கிராமத்திற்கு என, டிரான்ஸ்பார்மர் எனப்படும் மின் மாற்றி இல்லாததால், இக்கிராமத்திற்கு குறைந்த மின்னழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.இதனால், இப்பகுதிக்கு என, புதிதாக மின் மாற்றி அமைக்க வேண்டும் என, உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ., சுந்தரிடம், மடம் கிராம வாசிகள் கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.எம்.எல்.ஏ., வின் பரிந்துரைப்படி, மடம் கிராமத்திற்கு என, 63 கிலோ வாட் ஆம்பியர் திறன் கொண்ட புதிய மின் மாற்றி நேற்று அமைக்கப்பட்டது.காஞ்சிபுரம் தெற்கு கோட்டம் மேற்பார்வை பொறியாளர் பிரசாத், புதிய 'டிரான்ஸ்பார்மரை' இயக்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X