பொது செய்தி

தமிழ்நாடு

1,813 விளம்பர பலகைகள் காஞ்சிபுரத்தில் அகற்றம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், அனுமதியின்றி ஏராளமான டிஜிட்டல் பேனர்கள், விளம்பர தட்டிகள் வைக்கப்படுகின்றன.அவ்வாறு வைக்கப்படும் பலகைகளால் வாகன ஓட்டிகளின் கவனம் ஈர்க்கப்பட்டு, விபத்து ஏற்படுவது வழக்கமாக உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தின் கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள், விளம்பர பலகைகள்

காஞ்சிபுரம்-சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், அனுமதியின்றி ஏராளமான டிஜிட்டல் பேனர்கள், விளம்பர தட்டிகள் வைக்கப்படுகின்றன.அவ்வாறு வைக்கப்படும் பலகைகளால் வாகன ஓட்டிகளின் கவனம் ஈர்க்கப்பட்டு, விபத்து ஏற்படுவது வழக்கமாக உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தின் கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள், விளம்பர பலகைகள் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுகின்றன.இந்நிலையில், மாவட்டத்தில் அகற்றப்பட்ட பேனர்கள் குறித்து, கலெக்டர் ஆர்த்தி கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,517 விளம்பர பலகைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அதில் 1,813 பலகைகள் அகற்றப்பட்டு உள்ளன.மேலும், கட்டடங்கள் மீது மிகப்பெரிய அளவில் வைக்கப்பட்டதாக 259 விளம்பர பலகைகள் கண்டறியப்பட்டு, அதில் 106 பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.மீதமுள்ள பலகைகள், வரும் 20ம் தேதிக்குள் அகற்ற, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் வழியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X