பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் குறித்து அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை இல்லை.

Added : செப் 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
காஞ்சிபுரம்,--காஞ்சிபுரம் மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகள் குறித்து அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அதேசமயம் மனு அளிப்போர் மீது ரவுடிகள் கொலை மிரட்டல் விடுவதும், போலீசார் அச்சுறுத்தல் செய்வதும் தொடர்வதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'டாஸ்மாக்' எனப்படும் தமிழ்நாடு வாணிப கழகம் சார்பில், தெற்கு மாவட்டத்தில் மட்டும், 113
 டாஸ்மாக் கடைகள் குறித்து அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை  இல்லை.

காஞ்சிபுரம்,--காஞ்சிபுரம் மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகள் குறித்து அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அதேசமயம் மனு அளிப்போர் மீது ரவுடிகள் கொலை மிரட்டல் விடுவதும், போலீசார் அச்சுறுத்தல் செய்வதும் தொடர்வதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'டாஸ்மாக்' எனப்படும் தமிழ்நாடு வாணிப கழகம் சார்பில், தெற்கு மாவட்டத்தில் மட்டும், 113 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த கடைகள் கோவில் அருகிலும், குடியிருப்புகள் மத்தியிலும் அமைந்துள்ளதால், தினமும் ஏராளமான பிரச்னைகள் நிலவுகின்றன.கடந்த, 2016ல், அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் பொறுப்பேற்றதும், மாவட்டத்தில் 14 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதில் காஞ்சிபுரம் சந்தவெளியம்மன் கோவில் அருகே செயல்படும் கடையும் ஒன்று.குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்பட்ட இக்கடையால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, அந்த கடை மூடப்பட்டது.ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே, அதே பகுதியில் மீண்டும் துவங்கப்பட்டு, தற்போது வரை செழிப்பாக செயல்பட்டு வருகிறது.இந்த டாஸ்மாக் கடை சம்பந்தமாக, மாவட்ட கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த கடை ஏன் செயல்படுகிறது என்பதற்கு, முதல்வரின் தனிப்பிரிவு அனுப்பிய பதிலால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அந்த பதிலில், 'டாஸ்மாக் கடை அருகே எந்த குடியிருப்புகளும் இல்லை' என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது.மது அருந்தி, சந்தவெளியம்மன் கோவில் அருகே சாலையில் 'குடி'மகன்கள் படுத்து கிடப்பதும், காலையிலேயே கள்ளத்தனமாக ஆட்டோவில் மது விற்பனை நடப்பதுமாக உள்ளது.சந்தவெளியம்மன் கோவில் அருகே வசிப்போர் கூறியதாவது:எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் மிகவும் தொந்தரவு ஏற்படுகிறது. குடித்துவிட்டு வேலைக்கு செல்லும் பெண்களிடம் வம்பிழுப்பது, சாலையிலேயே அநாகரிமாக படுத்து கிடப்பது போன்றவற்றால் மன உளைச்சல் அடைகிறோம்.இது குறித்து வாராந்திர குறைதீர் கூட்டத்திலும்கூட புகார் அளித்துள்ளோம். பல போராட்டங்களை நடத்தியும், எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.மனு அளிக்கும்போது, நடவடிக்கை எடுப்பதாக கூறும் அதிகாரிகள், பின் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதேபோல், மேட்டுத்தெருவில் செயல்படும் டாஸ்மாக் கடை, 20 ஆண்டுகளுக்கு மேலாக, பல்வேறு பிரச்னைகளுடன் செயல்பட்டு வருகிறது.இந்த கடையை அகற்ற, 10 முறைக்கும் மேலாக, அப்பகுதியினர் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதேபோல் பள்ளிக்கூடத்தான் தெருவில் இருக்கும் கடையால் மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது.மேலும் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள கீரநல்லுார் கிராமத்தில் புதிதாக துவங்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்ட் 6ம் தேதி, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி, பொதுமக்கள் எத்தனை போராட்டம் நடத்தினாலும், அரசும், மாவட்ட நிர்வாகமும் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது.விரைவில் மாற்றப்படும்காஞ்சிபுரம் மேட்டுத்தெரு மற்றும் சந்தவெளியம்மன் கோவில் அருகே செயல்படும் டாஸ்மாக் கடைகள், விரைவில் இடமாற்றம் செய்யப்படும். இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், புகார் தெரிவிக்கின்றனர்.கந்தன்மாவட்ட மேலாளர்'டாஸ்மாக்' நிர்வாகம், காஞ்சிபுரம்போலீசார் அச்சுறுத்தல்சந்தவெளியம்மன் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மனு அளித்த நபர்களுக்கு, மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோவை, புகார்தாரர்கள், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அதேபோல், மனு அளித்த நபர் வீட்டில், சிவகாஞ்சி போலீசார், வேண்டுமென்றே சோதனை நடத்தி அச்சுறுத்தல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. கஞ்சா வைத்திருப்பதாக போலீசார் நடத்தும் சோதனையால் பயமாக இருப்பதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.'குடி'மகன்கள் அநாகரிகம்பள்ளிக்கூடத்தான் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையால், அங்கிருப்போர் பலர், தங்களது வீடுகளை காலி செய்து, வாடகைக்கு விட்டுள்ளனர். பொதுமக்களின் வீட்டு வாசலில் மது அருந்துவதும், மலம், சிறுநீர் கழிப்பதும் வாடிக்கையாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
09-செப்-202109:14:32 IST Report Abuse
R.RAMACHANDRAN எந்த விதமான புகார் செய்தாலும் அவை குற்றங்கள் செய்பவர்களுக்கே அனுப்புவதால் துணிந்து melum பல குற்றங்கள் புரிகின்றனர் இந்நாட்டில்.நாடு சுதந்திரம் பெற்றதன் நூற்றாண்டு விழா கொண்டாடும் போது எங்கும் குற்றவாளிகள் ராஜ்யமாகத்தான் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X