வெடிபொருளுடன் கார்: நீதா அம்பானியின் பயணம் ரத்து

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
மும்பை: முகேஷ் அம்பானி வீட்டிற்கு வெளியே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த நாளன்று, அவரது மனைவி நீதா அம்பானி குஜராத் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வெளியே, கடந்த பிப்ரவரி மாதம் வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த சம்பவம்
Nita Ambani, Cancelled, Gujarat Trip, SUV With Explosives

மும்பை: முகேஷ் அம்பானி வீட்டிற்கு வெளியே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த நாளன்று, அவரது மனைவி நீதா அம்பானி குஜராத் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வெளியே, கடந்த பிப்ரவரி மாதம் வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கைது


பின், இந்த வழக்கை விசாரிக்கத் துவங்கிய என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினர், போலீஸ் உதவி இன்ஸ்பெக்டராக இருந்த சச்சின் வாஸே என்பவரை கைது செய்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தான் காரை அங்கு நிறுத்திவிட்டுச் சென்றது தெரியவந்தது. பின், வாஸே பணி நீக்கம் செய்யப்பட்டார்.


latest tamil news



இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த வாரம் குற்றப் பத்திரிகையை என்.ஐ.ஏ., அதிகாரிகள் தாக்கல் செய்தனர். அதில் குறிப்பிடப்பட்டிருந்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸே உட்பட 10 பேரின் பெயர்கள் அந்த குற்றப் பத்திரிகை யில் குறிப்பிடப்பட்டு உள்ளன.


ரத்து


முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, இந்த சம்பவம் நடந்த தினத்தன்று, குஜராத்தின் ஜாம்நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்ததும், பின் காவல் துறையின் ஆலோசனைக்கு பின், அந்த திட்டத்தை அவர் ரத்து செய்ததாகவும் தெரியவந்துள்ளது.மேலும், அம்பானி குடும்பத்திற்கு பல கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருப்பதாகவும், அவை அனைத்தும் விவசாயிகள் போராட்டம் சார்ந்தவை என்றும் அம்பானி வீட்டின் தலைமை பாதுகாவலர் தெரிவித்த தாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil - Chennai,இந்தியா
09-செப்-202119:49:02 IST Report Abuse
Senthil பத்திரிக்கை செய்தி படிப்பது பள்ளி சிறுவர், சிறுமியர், பெண்கள் முதல் வயதானவர்கள் வரை, உங்கள் தினமலர் நாளிதழ் website செய்ததும், ஆபாச advertisement அதிகம் வருகிறது, அதை நீங்கள் எதற்காக அனுமதிக்கிறீர்கள் என தெரியவில்லை.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
09-செப்-202119:32:22 IST Report Abuse
Rajagopal மகாராஷிராவில் இருக்கும் அனைத்து போலீஸ்காரர்களையும் வேலை நீக்கம் செய்து, புதியவர்களைக் கொண்டு வர வேண்டியதுதான். எவன் போலீஸ், எவன் திருடன் என்று சொல்ல முடியாத அளவுக்கு எல்லாம் ஆகி விட்டது. தாவூத் இப்ராஹிம் போன்ற பெரிய டான்களுக்கு அரசியல்வாதிகளும், போலீஸ்காரர்களும், சினிமாக்காரர்களுக்கு பணிந்து வேலை செய்யும் நிலைக்கு அந்த மாநிலம் தள்ளப்பட்டிருக்கிறது.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
09-செப்-202117:51:53 IST Report Abuse
Sankar Ramu சீன கைகூலினா ஒன்னா சேர்ந்துப்பானுங்க. ரிலையன்ஸ் போன் வரும் முன் இவனுங்களால நினைச்சிகூட பாக்க முடியாத விலை இந்த செல் போன். பிலாஸ்டிக் மூல பொருள் வாங்க மத்திரி சிபாரிசு வேனும் ரிலையன்ஸ் வருவதற்கு முன். அவர்களை வாழ்த்த வேண்டும் , கொலை செய்ய முயற்சிப்பது சீன, பாக் கைகூலிகளாக கூட இருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X