சித்தி விநாயகருக்கு 81 கிலோவில் மெகா முக்குறுணி கொழுக்கட்டை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சித்தி விநாயகருக்கு 81 கிலோவில் 'மெகா' முக்குறுணி கொழுக்கட்டை

Added : செப் 09, 2021
Share
மதுரை : மதுரை ரயில்வே காலனி சித்தி விநாயக செல்வ முத்துக்குமார சுவாமி கோயிலில் சடகோப ராமானுஜ ஐயப்ப பக்த சபையினர் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 18 படி பச்சரிசியில், 81 கிலோ எடையில் 'மெகா' முக்குறுணி கொழுக்கட்டை தயாரித்து வருகிறார்கள்.கோயில் குருக்கள் ராமானுஜம் பாலாஜி கூறியதாவது: ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி நாளில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி
 சித்தி விநாயகருக்கு 81 கிலோவில் 'மெகா' முக்குறுணி கொழுக்கட்டை

மதுரை : மதுரை ரயில்வே காலனி சித்தி விநாயக செல்வ முத்துக்குமார சுவாமி கோயிலில் சடகோப ராமானுஜ ஐயப்ப பக்த சபையினர் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 18 படி பச்சரிசியில், 81 கிலோ எடையில் 'மெகா' முக்குறுணி கொழுக்கட்டை தயாரித்து வருகிறார்கள்.

கோயில் குருக்கள் ராமானுஜம் பாலாஜி கூறியதாவது: ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி நாளில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் கொழுக்கட்டை தயாரித்து படைக்கப்படும். அதே போல் இக்கோயிலில் உள்ள சித்தி விநாயகருக்கு 18 படி பச்சரிசி, 18 கிலோ வெல்லம், 250 கிராம் ஏலக்காய், தலா 9 கிலோ தேங்காய்கள், நெய், நல்லெண்ணெய் சேர்த்து 81 கிலோ எடையில் 'மெகா சைஸ்' முக்குறுணி கொழுக்கட்டை தயாரித்து படைக்கிறோம்.

நேற்று (செப்.,8) காலை 9:00 மணிக்கு ஆரம்பித்த தயாரிப்பு பணி நாளை மதியம் 3:00 மணிக்கு முடியும். மொத்தம் 54 மணி நேரம் தொடர்ந்து வேகவைத்த பின் எடுத்து சதுர்த்தி அன்று படைத்து பூஜை செய்யப்படும். தலா 9 பேர் கொண்ட இரண்டு குழுக்கள், கோயில் திருப்பணி குழுவினர் கண்காணிப்பில் கொழுக்கட்டை தயாராகி வருகிறது. இன்று மாலை 6:00 மணிக்கு சித்தி விநாயகர் திருக்கல்யாணம் நடக்கிறது என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X