தமிழ்நாடு

மதுரை நகரில் கண்டறியப்பட்ட ரவுடிகள் 700! 450 பேர் கைது; மற்றவர்கள் ஓட்டம்

Added : செப் 09, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மதுரை : மதுரை நகரில் 25 குழுக்களாக ரவுடிகள் செயல்பட்டு வருவதும், மொத்தம் 700 ரவுடிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவர்களில் 450 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றவர்களை கைது செய்யும் பணியை தீவிரப்படுத்த கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.நகரில் புதுப்புது ரவுடிகள் உருவாகி வருகின்றனர். 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள்கூட வழிப்பறி, கொலை உள்ளிட்ட வழக்குகளில்
 மதுரை நகரில் கண்டறியப்பட்ட ரவுடிகள் 700! 450 பேர் கைது; மற்றவர்கள் ஓட்டம்

மதுரை : மதுரை நகரில் 25 குழுக்களாக ரவுடிகள் செயல்பட்டு வருவதும், மொத்தம் 700 ரவுடிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவர்களில் 450 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றவர்களை கைது செய்யும் பணியை தீவிரப்படுத்த கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

நகரில் புதுப்புது ரவுடிகள் உருவாகி வருகின்றனர். 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள்கூட வழிப்பறி, கொலை உள்ளிட்ட வழக்குகளில் கைதாகி வருகின்றனர். ரவுடிகள், அவர்களின் பின்னணி குறித்து போலீசார் அறியும் வகையில் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹா பிரத்யேக செயலி ஒன்றை கடந்தாண்டு அறிமுகம் செய்தார். அதில் பழைய, புதிய ரவுடிகளின் அனைத்து விபரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 'இது மதுரைக்கு மட்டுமல்லாமல், தமிழக போலீசாருக்கே பயனுள்ளதாக இருக்கிறது' என கமிஷனரை டி.ஜி.பி., சைலேந்திரபாபு பாராட்டியுள்ளார்.

நமது நிருபரிடம் கமிஷனர் கூறியதாவது: ரவுடிகளை கட்டுப்படுத்த துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து செல்லும் முறையை அறிமுகப்படுத்தினேன். இதன்மூலம் பொது இடத்தில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நகரில் ரவுடிகள் 25 குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். மொத்தம் 700 பேரில் 450 பேர் வரை கைது செய்துள்ளோம். மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ரவுடியிஸம் செய்வோரை கட்டுப்படுத்த உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்படுகிறது. இதுவரை 1120க்கும் மேற்பட்டோரிடம் உறுதிமொழி பத்திரம் வாங்கியுள்ளோம். மீறி ரவுடியிஸம் செய்வோர் எவ்வித விசாரணையுமின்றி சிறையில் அடைக்கப்படுவர். அந்த வகையில் 70 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marcopolo - Chennai,இந்தியா
10-செப்-202105:56:46 IST Report Abuse
Marcopolo மதிப்பிற்குரிய ஐயா, ஒரு முறை கிரேட் எஸ்கேப் படம் பார்த்து இறுதியில் தப்ப முயற்சி எடுத்த போர்வீரர்கள் களுக்கு என்ன நேர்ந்ததோ அதை செய்யவும்.
Rate this:
Cancel
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
09-செப்-202114:01:54 IST Report Abuse
B. இராமச்சந்திரன் அஞ்சா நெஞ்சருக்கு இந்த 700இல் இடஒதுக்கீடு அளித்தீர்களா...
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
09-செப்-202110:00:00 IST Report Abuse
S Bala அதிமுக, அழகிரி கூட்டம், இவற்றில் இருந்த ரவுடிகளை மட்டும் கைது செய்வார்கள். இன்னும் குருசாமி, தளபதி, மன்னன், எஸ்.ஆர்.கோபி, அட்டாக் பாண்டி, போன்றவர்கள் அடக்கப்படவே இல்லை. அவர்களை அடக்கம் செய்தால் மதுரை உருப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X