பொது செய்தி

இந்தியா

டுவிட்டர் அதிகாரிக்கு சம்மன்; உ.பி., அரசு மேல்முறையீடு

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021
Share
Advertisement
புதுடில்லி : 'டுவிட்டர்' சமூக வலை தளத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனராக இருந்த மணிஷ் மகேஷ்வரி, நேரில் ஆஜராக பிறப்பித்த உத்தரவை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து, உத்தர பிரதேச அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.உத்தர பிரதேசத்தில் உள்ள காஜியாபாதில், ஒரு முஸ்லிம் பெரியவரை சில இளைஞர்கள் தாக்கியதாகவும்,

புதுடில்லி : 'டுவிட்டர்' சமூக வலை தளத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனராக இருந்த மணிஷ் மகேஷ்வரி, நேரில் ஆஜராக பிறப்பித்த உத்தரவை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து, உத்தர பிரதேச அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.



latest tamil news


உத்தர பிரதேசத்தில் உள்ள காஜியாபாதில், ஒரு முஸ்லிம் பெரியவரை சில இளைஞர்கள் தாக்கியதாகவும், 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட வற்புறுத்தியதாகவும், 'வீடியோ' வெளியானது. இதை சிலர், டுவிட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத மோதலை ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக, டுவிட்டர் நிறுவனத்தின் மீது காஜியா பாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக நேரில் ஆஜராகும்படி, மணிஷ் மகேஷ்வரிக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது.இதை எதிர்த்து, கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்த மகேஷ்வரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


latest tamil news


அதன்படி, சம்மனை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, மகேஷ்வரி அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்துக்கு மாற்றப் பட்டார்.உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உத்தர பிரதேச அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'இதை அவசரமாக விசாரிக்க வேண்டும்' என, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டார். கோரிக்கை குறித்து கவனிப்பதாக, தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X