மல்லிகை, கனகாம்பரம் விலை அதிகரிப்பு; விநாயகர் சதுர்த்தி எதிரொலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மல்லிகை, கனகாம்பரம் விலை அதிகரிப்பு; விநாயகர் சதுர்த்தி எதிரொலி

Added : செப் 09, 2021
Share
திண்டுக்கல் : விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் பூக்கள் வரத்து குறைவால் விலை இரு மடங்கு அதிகரித்து விற்பனையானது.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திண்டுக்கல், நிலக்கோட்டை மார்க்கெட்டிற்கு பூக்கள் விற்பனைக்கு வருகிறது. போதிய மழையின்மை, வெயிலால் சில வாரங்களாகவே பூக்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் பூக்கள் வாங்க

திண்டுக்கல் : விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் பூக்கள் வரத்து குறைவால் விலை இரு மடங்கு அதிகரித்து விற்பனையானது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திண்டுக்கல், நிலக்கோட்டை மார்க்கெட்டிற்கு பூக்கள் விற்பனைக்கு வருகிறது. போதிய மழையின்மை, வெயிலால் சில வாரங்களாகவே பூக்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் பூக்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. நாளை (செப்.10) விநாயகர் சதுர்த்தி, தொடர் முகூர்த்த நாளை முன்னிட்டு பூக்கள் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது.

ஆயிரத்தை தாண்டியதுநேற்று முன்தினம் கிலோ ரூ.600 க்கு விற்ற மல்லிகை ரூ.1,300, ரூ.400 க்கு விற்ற முல்லை ரூ.700, ரூ.600க்கு விற்ற கனகாம்பரம் ரூ.1,200, ரூ.50 க்கு விற்ற செண்டு மல்லி ரூ.150, ரூ.250 க்கு விற்ற சம்பங்கி ரூ.450, ரூ.150க்கு விற்ற அரளி ரூ.300, ரூ.60 க்கு விற்ற கோழிக்கொண்டை ரூ.120, ரூ.70 க்கு விற்ற பன்னீர் ரோஸ் ரூ.150, அருகம்புல் ஒரு கட்டு ரூ.10 க்கும் விற்றது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X