பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் மாணவர்களை கண்காணிக்கும் டாக்டர்கள் குழு

Added : செப் 09, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகள், பள்ளி மாணவர்களின் உடல்நிலையை தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தின் கீழ் டாக்டர்கள் குழு கண்காணித்து வருகின்றனர்.பிறந்த குழந்தை முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் பாதிப்புகளை துவக்கத்திலேயே கண்டறிய மத்திய அரசு தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகள், பள்ளி மாணவர்களின் உடல்நிலையை தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தின் கீழ் டாக்டர்கள் குழு கண்காணித்து வருகின்றனர்.

பிறந்த குழந்தை முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் பாதிப்புகளை துவக்கத்திலேயே கண்டறிய மத்திய அரசு தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக மாநகராட்சியில் டாக்டர், செவிலியர், மருந்தாளுநர் அடங்கிய 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனா குறைந்து வருவதால் செப்.1 முதல் 9 -- 12 ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன.

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் அங்கன்வாடி மையங்களும் திறக்கப்பட்டு, 2 - 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிக்கும் பணியை டாக்டர்கள் குழு துவங்கி உள்ளது. அதற்கான சிகிச்சை அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும்.டாக்டர் ஜெசிந்தா கூறுகையில், ''மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு வழங்குகிறோம். கொரோனா காலத்தில் மாணவர்களின் உடல்நிலையை கண்காணித்து, பாதுகாக்கவே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X