அரசியல் செய்தி

தமிழ்நாடு

மணல் கொள்ளையை வேடிக்கை பார்க்கும் பொதுப்பணித்துறை: கமல் வருத்தம்

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை: கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் மணல் கொள்ளை நடந்து வருவதாகவும், இதனை பொதுப்பணித்துறை சிறப்பான முறையில் வேடிக்கை பார்ப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்து
MNM, Kamalhaasan, Sand, மக்கள் நீதி மய்யம், மநீம, கமல், கமல்ஹாசன், மணல் கொள்ளை, வருத்தம்

சென்னை: கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் மணல் கொள்ளை நடந்து வருவதாகவும், இதனை பொதுப்பணித்துறை சிறப்பான முறையில் வேடிக்கை பார்ப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்து வருவது அம்பலமாகியுள்ளது. 50 ஆண்டுகளாக தமிழகத்தில் நிகழ்வது தான். ஆனால், இந்த மணல் கொள்ளை தலைமை செயலகத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் நாற்புறமும் அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில் நடக்கிறது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் சாலையின் வழியாக லாரி லாரியாக மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது. பொதுப்பணித்துறை சிறப்பான முறையில் வேடிக்கை பார்த்துள்ளது.


கோட்டை வழியாக மணல் கொள்ளை கமல் கண்டனம்

latest tamil news



மிகமிக குறைந்தபட்ச மதிப்பு வைத்து கணக்கிட்டாலும் நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மணல் ஏப்பம் விடப்பட்டுள்ளது. வருடத்திற்கு சுமார் 11 கோடி ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பு. இவையெல்லாவற்றையும் விட பெரும்கொடு என்னவென்றால், இந்த மணல் கட்டுமானத்திற்கு உகந்தது அல்ல. இம்மணலைக் கொண்டு கட்டடம் கட்டினால் நிச்சயம் இடிந்து விழுந்துவிடும் என்கிறார்கள் கட்டுமான நிபுணர்கள். அப்படியெனில், இந்த மணலை அள்ளி கட்டங்கள் கட்டிய மகானுபாவர்கள் யார்? அவற்றைப் பயன்படுத்தப்போவது யார்? அதில் வாழப்போகிற மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு?


latest tamil news


கூவம் கடலுடன் இணையும் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் சூழியல் மிக மோசமாக அழிந்துவருகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறார்கள். அனுமதி இல்லாமல் திருடுகிறார்களே என்று வருந்துவதா? அரசுக்கு வருவாய் இழப்பு என்று வருந்துவதா? அரசு இயந்திரம் உறங்கிக்கொண்டிருக்கிறதே என்று வருந்துவதா? ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடர்கிறதே என வருந்துவதா? சூழியல் சீரழிகிறதே என்று வருந்துவதா? இந்த மண்ணில் கட்டப்படும் கட்டங்களால் ஏற்படப் போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா?. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
10-செப்-202103:51:18 IST Report Abuse
Arachi சுட்டிக்காட்டுவது நல்லது.சார் இது கடந்த 100 நாளாக நடக்குதுங்களா? குறைகளை புள்ளிவிவரமாக எடுத்துக்கொண்டு தீர்வுகாணுகிறது இந்த அரசு.நீங்கள் சடடசபைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் சினிமா மாதிரி ஹீரோ இரண்டரை மணிநேரத்தில் குற்றங்களை தடுத்துவிட முடியாது
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
10-செப்-202102:33:10 IST Report Abuse
BASKAR TETCHANA சில முக்கிய தலைகள் அரசில் இருக்கும் பொது சர்வசாதாரணம். ஸ்டாலின் ஆசீவாதப்படி தான் எல்லாமே நடக்கிறது. இதற்க்கு எல்லா துறைகளும் ஒத்து உழைக்கின்ற என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
Rate this:
Cancel
babu - tiruchi,இந்தியா
10-செப்-202101:28:51 IST Report Abuse
babu அய்யய்யா கமலஹாசன் பணம் இருந்தால் செய்தி சேனல் ஆரம்பிச்சி மக்களிடம் விழிப்பூட்டலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X