அரசியல் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம்: முதல்வர் ஸ்டாலின்

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
சென்னை: நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பில், நவீன வசதிகளுடன் ''பொருநை'' அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது. சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது. அகழாய்வு பணிகளை மத்திய அரசு பாதியில் கைவிட்டது. அங்கு 4ம்
நெல்லை, அருங்காட்சியகம், முதல்வர், ஸ்டாலின்,

சென்னை: நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பில், நவீன வசதிகளுடன் ''பொருநை'' அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது. சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது. அகழாய்வு பணிகளை மத்திய அரசு பாதியில் கைவிட்டது. அங்கு 4ம் நூற்றாண்டை சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டு உள்ளது. கீழடி நாகரீகம் 6ம் நூற்றாண்டு நாகரீகம் என தெரியவந்துள்ளது. அகழாய்வு பணிகளுக்கு ஏற்கனவே 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அகழாய்வு நடக்கும் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி ஏற்கனவே கண்டறியப்பட்டு உள்ளது.


latest tamil news


கொற்கை துறைமுகம் கி.மு.6-ம் நூற்றாண்டுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நெல்லை நகரில் ரூ.15 கோடியில் நவீன வசதிகளுடன் ''பொருநை'' தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும். பொருநை ஆற்றங்கறை நாகரீகம் 3200 ஆண்டுகள் பழமையானது என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் எழுதப்பட வேண்டும்.

கேரள மாநிலம் பட்டணம் ஆந்திரா வேங்கி, ஒடிசாவின் பாலூர், கர்நாடகாவில் தலைக்காடு உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் ஆய்வு செய்வோம். இந்தோனேஷியா, தாய்லாந்து மலேஷியா, வியட்நாம் நாடுகளில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளப்படும். தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை தேடி உலகெங்கும் பயணம் செய்வோம். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் துவங்கி எழுத வேண்டும் என்பதை சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் வழி நின்று நிறுவுவதே இந்த அரசின் லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-செப்-202123:33:59 IST Report Abuse
Pugazh V மாலத்தீவில் இருந்து எட்டிப் பார்த்தால் எதுவும் தெரியாது. திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி யை ல் ஏராளமான நன்மைகள் மக்களுக்கு வேண்டும் ளைகின்றன. ஒவ்வொரு துறையிலும் விடியல் மலர்ந்து வருகிறது. ஒரு நடை தமிழ் நாடு வந்து பார்த்து விட்டு எழுதவும்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-செப்-202123:31:27 IST Report Abuse
Pugazh V இந்த அரசு பிடிக்காதவர்கள் வேறு மாநிலத்துக்கு குடி பெயரவும்"
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
09-செப்-202120:05:31 IST Report Abuse
MANIAN K கீழடியில் கண்டெடுத்த பதினாயிரம் ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் மறைக்கபட்டதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X