ஏழை நாடுகளுக்கு மிச்சம் மீதி தடுப்பூசியா? உலக சுகாதார அமைப்பு கண்டனம்

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஜெனிவா: 'வளர்ந்த நாடுகளிடம் உள்ள தடுப்பூசி மிச்சங்களை கொண்டு ஏழை நாடுகள் தங்களின் தேவையை நிறைவேற்றி கொள்ளட்டும் என்ற மனப்பான்மை ஏற்புடையது அல்ல' என, உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மருந்து நிறுவனங்கள் சில தினங்களுக்கு முன் தடுப்பூசிகள் இருப்பு பூஸ்டர் டோசை

ஜெனிவா: 'வளர்ந்த நாடுகளிடம் உள்ள தடுப்பூசி மிச்சங்களை கொண்டு ஏழை நாடுகள் தங்களின் தேவையை நிறைவேற்றி கொள்ளட்டும் என்ற மனப்பான்மை ஏற்புடையது அல்ல' என, உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.



latest tamil news



உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மருந்து நிறுவனங்கள் சில தினங்களுக்கு முன் தடுப்பூசிகள் இருப்பு பூஸ்டர் டோசை எதிர்கொள்ளவே போதுமானதாக இருக்கிறது என்று கூறின. அந்த மருந்து நிறுவனங்களின் அலட்சியம் என்னை கோபப்படுத்தி உள்ளது. கோவிட் தடுப்பூசி விநியோகத்தில், வளர்ந்த நாடுகளிடம் அபிரிமிதமாக இருக்கும் மிச்சங்களைக் கொண்டு, ஏழை நாடுகள் தங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ளட்டும் என்ற மனப்பான்மையில், வளர்ந்த நாடுகளும் மருந்து நிறுவனங்களும் செயல்படுகின்றன. இது ஏற்புடையது அல்ல. அப்படிப்பட்டவர்கள் நடத்தையைப் பொறுத்துக் கொண்டு அமைதி காக்க மாட்டேன்.


latest tamil news




இந்த ஆண்டு இறுதி வரையிலாவது வளர்ந்த நாடுகள் மூன்றாம் டோஸ் தடுப்பூசியை நிறுத்திவைக்கலாம். இதனால், உலகளவில் அனைத்து நாடுகளுமே குறைந்தபட்சம் தங்கள் மக்களில் 40% பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும். இதுவரை உலகளவில் 5.5 பில்லியன் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் 80% தடுப்பூசிகள் வளர்ந்த நாடுகளால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
09-செப்-202120:43:29 IST Report Abuse
J.Isaac முதலில் கொரனோ வைரஸை உருவாக்கி உலகம் முழுவதும் பரப்பி பொருளாதார சீரழிவை ஏற்படுத்திய சீனாவை கண்டிக்க வேண்டும்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
09-செப்-202118:47:30 IST Report Abuse
M  Ramachandran ஏன் நீங்கள் ஆதரிக்கும் சீனாவினால் எர்ப்பட்ட இழப்பு தானெ. அந்த நாட்டை கண்டிக்க துணிவில்லையா? எல்ல நாட்டையும் பொது வாக பேசுகிறீர்கள்? உங்கள் பதவி காலத்தில் தான் சீன துணிகறமாக பாழா அது மிரர்களை செய்து கொண்டிருக்கிறது.ஐ நா விற்கென பெப் பெ காட்டும் துணிச்சல் சீனாவிற்கு எப்படி யேற்பட்டது?
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
09-செப்-202118:07:55 IST Report Abuse
Kumar மூர்க்கர்கள் ஆட்சி செய்யும் ஏழை நாடுகளில் தடுப்பூசி போட விடமாட்டார்களே? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X