சட்டசபை கூட்டம் நேரடி ஒளிபரப்பு: ஸ்டாலின் அறிவிப்பு

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை: புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசும் போது, சட்டசபை கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்பு செய்வோம் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது என தெரிவித்தார்.இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, புனித ஜார்ஜ் கோட்டையில்
ஸ்டாலின், திமுக, பழனிசாமி, முதல்வர், கோடநாடு, சட்டசபை, நேரடி ஒளிபரப்பு, ஜெயலலிதா

சென்னை: புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசும் போது, சட்டசபை கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்பு செய்வோம் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போது நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கலைவாணர் அரங்கில், சில காரணங்களால் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், தற்போது அது குறித்து கோரிக்கை வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


கோடநாடு விவகாரம்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி


பின்னர் பழனிசாமி பேசும்போது, அதிமுக ஆட்சியில் நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து போன்றவை நடக்கவில்லை எனக்கூறினார்.
அமைச்சர் துரைமுருகன்: அதிமுக ஆட்சியின் போது தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தது. பிறந்த நாள் விழாவின் போது ரவுடிகள் அரிவாளால் கேக் வெட்டியது அதிமுக ஆட்சி காலத்தில் தான்.

ஸ்டாலின்: கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது முதல்வராக இருந்த பழனிசாமி என்ன செய்தார். சம்பவம் நடந்த இடம் சாதாரண இடமில்லை. அதனை எந்த குற்றத்தில் சேர்ப்பது? ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, கோடநாட்டில் தங்கியிருந்து அலுவல் மேற்கொண்டார். ஜெயலலிதா அலுவல் மேற்கொண்ட இடத்தில் சிசிடிவி கேமரா ஏன் அகற்றப்பட்டது? 4 ஆண்டுகள் முதல்வராக இருந்தும் பழனிசாமி அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? கொலை, கொள்ளை சம்பவத்தின் போது ஏன் சிசிடிவி கேமராக்கள் ஏன் செயல்படவில்லை?. கோடநாடு மேல் விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது யார்? உச்சநீதிமன்றம் சென்றது ஏன்?


latest tamil news


பழனிசாமி : ஜெயலலிதா மறைவுக்கு பின் சொத்து வேறு ஒருவருக்கு சென்றுவிட்டது. தனியார் சொத்துக்கு நாங்கள் எப்படி பாதுகாப்பு தர முடியும். இவ்வாறு அவர் பேசினார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pk Kk - Madurai,இந்தியா
10-செப்-202106:45:33 IST Report Abuse
Pk Kk வெளிப்படைத்தன்மை ரொம்ப முக்கியம் அமைச்சர்களே
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-செப்-202106:13:28 IST Report Abuse
Mani . V பாஸ் நேரடி ஒளிபரப்பு செய்வது முக்கியமில்லை. நிமிடத்துக்கு ஒரு முறை தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் உதயநிதியை காண்பித்துக் கொண்டே இருக்கவும், சபை மரபை மீறி மந்திரி பிரதானிகள் அவருக்கு கூழை கும்பிடு போடுவதையும், சம்பந்தமே இல்லாமல் புகழ்வதையும் ஒளிபரப்பு செய்யவும். கண்டிப்பா செய்வீங்க.
Rate this:
Cancel
Dhanapandian S - tiruchirappalli,இந்தியா
10-செப்-202105:30:50 IST Report Abuse
Dhanapandian S எல்லாம் சரி, அப்படியே அந்த திருச்சி ராமஜெயம் வழக்கு என்ன ஆச்சுன்னு பாருங்கள் முதல்வர் அவர்களே. நேரு மறந்துவிட்டார் என நினைக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X