தமிழகத்திற்கு ரூ.183 கோடி நிதி: மத்திய அரசு விடுவிப்பு

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: 17 மாநிலங்களுக்கு 6வது தவணையாக ரூ.9,871 கோடி வருவாய் பற்றாக்குறை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வருவாயை பகிர்ந்து கொள்வது தொடா்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிதிக் குழு வழங்கும். வருவாயை விட செலவினம் அதிகமாகக் காணப்படும் மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை நிதியை
Fourth Term, Revenue Deficit Fund, States, Centre, வருவாய், பற்றாக்குறை, நிதி, மத்திய அரசு,விடுவிப்பு

புதுடில்லி: 17 மாநிலங்களுக்கு 6வது தவணையாக ரூ.9,871 கோடி வருவாய் பற்றாக்குறை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வருவாயை பகிர்ந்து கொள்வது தொடா்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிதிக் குழு வழங்கும். வருவாயை விட செலவினம் அதிகமாகக் காணப்படும் மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை நிதியை வழங்குவதற்கு நிதிக் குழு பரிந்துரைக்கும். அவ்வாறு வழங்கப்படும் நிதி மாநிலங்களின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க உதவும்.

அதன்படி, 15-வது நிதிக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தகுதிவாய்ந்த 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை நிதியை மாதந்தோறும் ஒவ்வொரு தவணைகளாக விடுவித்து வருகிறது.


latest tamil news




இந்நிலையில், 6வது தவணையாக தமிழகம், ஆந்திரா, அசாம், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், மேற்குவங்கம் ஆகிய 17 மாநிலங்களுக்கு ரூ. 9,871 கோடியை வருவாய் பற்றாக்குறை நிதியாக மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதில் தமிழகத்துக்கு ரூ.183.67 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது. இந்த 17 மாநிலங்களுக்கும் மொத்தமாக இதுவரை ரூ.59,226 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
10-செப்-202108:24:59 IST Report Abuse
Sampath Kumar விடுவிப்பு ??/ முதலில் இந்த சோலே தப்பு ?/ யார் வீடு சொத்தை யார் விடுவிப்பது ??/ வழங்கியது அல்லது அறிவித்தது என்று இருக்கவேண்டும்
Rate this:
Cancel
10-செப்-202103:42:47 IST Report Abuse
Kumar Singapore என்னமோ அவங்க அப்பன் காச குடுக்கற மாதிரி போட்டுருக்கு. இது தமிழ்நாட்டு மக்களோட காசு.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-செப்-202123:27:37 IST Report Abuse
Pugazh V புலம்பல்கள் பிரமாதம். இன்னும் நெறைய.நெறைய வர வேண்டும். கமான்.. எழுதுங்கள். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் இந்த 183 கோடியில் என்ன செய்யலாம் என்று தீர்மானிப்பார். உங்களால் இதுபோல நகைச்சுவை யாகப் புலம்ப மட்டுமே முடியும். நீங்கள் வாக்களித்த அந்த 4 எம் எல் ஏக்களோ அல்லது உங்கள் அணி எம் எல் ஏ க்களோ ஒரு ஆணியும் புடுங்க முடியாது. அவைக்குள் வந்ததும் "கொடநாடு" என்று சொன்னால் போதும். இபிஎஸ் எழுந்து ஓடி விடுவார். கூடவே அடிப்பொடிகளும். அந்த 4 பேரில் ஒருத்தர் அவைக்கு வருவதே இல்லை. 2 ஆவது ஆள் வந்தாலும் வாய் திறப்பதே இல்லை. எனவே மு.க. ஸ்டாலின் தலைமை யில் தலை நிமிரும் தமிழ் நாடு தழைத்தோங்கி உயர்ந்து வளரும். நீங்கள் இப்படி காமெடி எழுதிண்டே இருங்கோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X