தமிழகத்திற்கு ரூ.183 கோடி நிதி: மத்திய அரசு விடுவிப்பு| Dinamalar

தமிழகத்திற்கு ரூ.183 கோடி நிதி: மத்திய அரசு விடுவிப்பு

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (12) | |
புதுடில்லி: 17 மாநிலங்களுக்கு 6வது தவணையாக ரூ.9,871 கோடி வருவாய் பற்றாக்குறை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வருவாயை பகிர்ந்து கொள்வது தொடா்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிதிக் குழு வழங்கும். வருவாயை விட செலவினம் அதிகமாகக் காணப்படும் மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை நிதியை
Fourth Term, Revenue Deficit Fund, States, Centre, வருவாய், பற்றாக்குறை, நிதி, மத்திய அரசு,விடுவிப்பு

புதுடில்லி: 17 மாநிலங்களுக்கு 6வது தவணையாக ரூ.9,871 கோடி வருவாய் பற்றாக்குறை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வருவாயை பகிர்ந்து கொள்வது தொடா்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிதிக் குழு வழங்கும். வருவாயை விட செலவினம் அதிகமாகக் காணப்படும் மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை நிதியை வழங்குவதற்கு நிதிக் குழு பரிந்துரைக்கும். அவ்வாறு வழங்கப்படும் நிதி மாநிலங்களின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க உதவும்.

அதன்படி, 15-வது நிதிக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தகுதிவாய்ந்த 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை நிதியை மாதந்தோறும் ஒவ்வொரு தவணைகளாக விடுவித்து வருகிறது.


latest tamil news




இந்நிலையில், 6வது தவணையாக தமிழகம், ஆந்திரா, அசாம், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், மேற்குவங்கம் ஆகிய 17 மாநிலங்களுக்கு ரூ. 9,871 கோடியை வருவாய் பற்றாக்குறை நிதியாக மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதில் தமிழகத்துக்கு ரூ.183.67 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது. இந்த 17 மாநிலங்களுக்கும் மொத்தமாக இதுவரை ரூ.59,226 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X