தன்னை வரைய என்னை இறைவன் பயன்படுத்திக் கொண்டான்.

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
காஞ்சி காமாட்சி,ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர்,திருப்பதி வெங்கடாஜலபதி,மைசூர் சாமுண்டீஸ்வரி என்று பிரபலமான பல்வேறு கோவில் மூலவர்களின் ஒவியங்களை வரைந்தவர்தான் ஆ.மணிவேலு.தற்போது சென்னையில் வசிக்கிறார்.தற்போது எண்பது வயதாகும் மணிவேலு கடந்த ஐம்பது வருடங்களாக இறை ஒவிய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.தந்தை ஆறுமுகம் தேர்ந்த சிற்பக் கலைஞர் அவருடன் சிறு




latest tamil news


காஞ்சி காமாட்சி,ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர்,திருப்பதி வெங்கடாஜலபதி,மைசூர் சாமுண்டீஸ்வரி என்று பிரபலமான பல்வேறு கோவில் மூலவர்களின் ஒவியங்களை வரைந்தவர்தான் ஆ.மணிவேலு.தற்போது சென்னையில் வசிக்கிறார்.
தற்போது எண்பது வயதாகும் மணிவேலு கடந்த ஐம்பது வருடங்களாக இறை ஒவிய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.


latest tamil news


தந்தை ஆறுமுகம் தேர்ந்த சிற்பக் கலைஞர் அவருடன் சிறு வயதில் இருந்தே சிற்பக்கலையை கற்றவருக்கு சிற்பக்கலை மட்டுமின்றி ஒவியக்கலையும் ஒரே சேர வந்தது கூடவே ஆன்மீகத்தில் அளவிலா நாட்டம் ஏற்பட்டது.


latest tamil news


எனது ஆர்வத்தை பார்த்த கலைமகள் ஒவிய ஆசிரியர் எம்.எஸ்.குமாரசாமி எனக்கு கடவுள் படங்களை வரைவதில் பயிற்சி கொடுத்தார்.


latest tamil news


1979 ல் எனது விநாயகர் ஒவியம் முதன் முதலாக கலைமகள் தீபாவளி மலரில் வந்தது ஒவியம் நேரில் பார்ப்பது போல தத்ரூபமாக இருப்பதாக பலரும் பாராட்டினர் பாராட்டியவர்களில் இதயம் பேசுகிறது மணியனும் ஒருவர் அவர் ‛ஞான பூமி' என்ற தனது மாத இதழுக்கு மாதம் ஒரு ஒவியம் வரைந்து கொடுக்க முடியுமா? என்று கேட்டார்.


latest tamil news


அப்படி ஆரம்பித்ததுதான் பிரபலமான கோவில்களின் மூலவர் ஒவியங்கள்.கோவிலில் முறையான அனுமதி பெற்றுத்தந்து விடுவர் மூலவரை போட்டோ எடுக்கக்கூடாது என்பதால் கூட்டம் இல்லாத நேரத்தில் மூலவரை அலங்காரம் செய்த நிலையிலும் அலங்காரம் செய்யாத நிலையிலும் பலமணி நேரம் நின்று பார்த்து ‛அவுட் லைன்'வரைந்து கொள்வேன்.மூலவருக்கு போடக்கூடிய ஆபரணங்களையம் அதே போல வரைந்து கொள்வேன்.இதற்கே இரண்டு மூன்று நாளாகும்.
பின்னர் வீட்டிற்கு வந்து ஒவியத்தை வரைய ஆரம்பித்தால் அந்த ஒவியத்தை அதன் தன்மையைப் பொறுத்து இருபது நாள் வரையிலும் கூட வரைவேன்.சுவாமி ஒவியம் வரையும் போது விரதம் மேற்கொள்வேன் மிகவும் சுத்த பத்தமாக இருப்பேன்.
வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட ஒவிய கருவிகள் மற்றும் வாட்டர் கலர் வண்ணங்களைத்தான் ஒவியம் வரைய பயன்படுத்துவேன் எத்தனை ஆண்டுகளானாலும் ஒவியம் மங்காது.
புத்தகத்தில் வந்த ஒவியத்தை பார்த்துவிட்டு ஆந்திரா,கேரளா,கர்நாடகா மாநில கோவில்களில் இருந்தெல்லாம் அழைப்பு வந்தது அங்கேயும் போய் வரைந்து வந்தேன்
இது வரை 500 சுவாமி மற்றும் அம்பாள் படங்களை வரைந்திருப்பேன் கடவுளின் ஒவியங்களை தவிர வேறு ஒவியங்களை வரைவதில்லை ஒரு முறை வரைந்த ஒவியத்தை திரும்ப வரைவதில்லை.
எனது ஒவியங்கள் பலரது வீட்டின் பூஜை அறையை அலங்கரித்து கொண்டிருக்கிறது பெரிய நிறுவனங்களின் வரவேற்பறையில் வீற்றிருக்கும், காலண்டராக வந்துள்ளது.
ஒவியம் வரைய ஆரம்பகாலத்தில் ஏழாயிரம் ரூபாய் வரை செலவானது கடைசியாக நான் வரைந்த திருவண்ணாமலையார் ஒவியத்தை வரைய 50 ஆயிரம் ரூபாய் செலவானது. செலவுகளை எல்லாம் தாண்டி எனக்கான சன்மானத்தை பல நிறுவனங்கள் நிறையவே வழங்கின.
வயது முதிர்வு காரணமாக நான் தற்போது ஒவியம் வரைவதில்லை வரைந்தவரை மகிழ்கிறேன் என்னை வரைய வைத்தவன் இறைவன் மூலவரின் முன்னால் ஒரு சில வினாடிகளே நிற்க முடியாத பக்தர்கள் பலர் இருக்கையில் பல மணி நேரம் மூலவரின் முன் நிற்கும் பாக்கியத்தை அளித்த அத்தனை சுவாமி அம்பாள் தெய்வங்களையும் என் நெஞ்சார வணங்குகிறேன்.
காஞ்சிபுரம் ஒரிக்கையில் விஜேயேந்திரர் சுவாமிகள் தலைமையில் நடந்துவரும் சாதுர்மாஸ்ய விரததத்தை முன்னிட்டு வரக்கூடிய பக்தர்கள் பார்த்து ரசிக்கவேண்டும் என்பதற்காக மணவேலுவின் ஒவிய கண்காட்சியை ‛டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' ஏற்பாடு செய்து நடத்திவருகிறது.
வருகின்ற 20 ந்தேதி வரை இந்த ஒவிய கண்காட்சி நடைபெறும் பிரபலமான ஒவியர்கள் மணியம் செல்வன்,கேசவ் ஆகியோர் பார்த்து பாராட்டிய ஒவியங்களை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
13-செப்-202106:23:04 IST Report Abuse
 Muruga Vel சில்பி என்றொரு ஓவியரும் இருந்தார் ..அந்த கால பரணீதரன் வேணுகோபாலன் போன்றோர் காவியங்களை அற்புதமாக ஓவியம் வரைந்தனர் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X