அமெரிக்கா அழுத்தம்; மேலும் 200 வெளிநாட்டவர்களை விடுவிக்கும் தலிபான்

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
\காபூல்: தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து உள்ள நிலையில் அங்கு பல்வேறு அடக்குமுறை சம்பவங்கள் நாளுக்குநாள் அரங்கேறி வருகின்றன.சமீபத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற சர்வதேச ஊடகவியலாளர்கள் தாலிபான்களால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல தலிபான்களின் அடக்குமுறை காரணமாக பெண் நீதிபதிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்கர்கள்
அமெரிக்கா, அழுத்தம், தலிபான்

\காபூல்: தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து உள்ள நிலையில் அங்கு பல்வேறு அடக்குமுறை சம்பவங்கள் நாளுக்குநாள் அரங்கேறி வருகின்றன.

சமீபத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற சர்வதேச ஊடகவியலாளர்கள் தாலிபான்களால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல தலிபான்களின் அடக்குமுறை காரணமாக பெண் நீதிபதிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்கர்கள் உட்பட 200 வெளிநாட்டவர்கள் நாட்டவர்களை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியே செல்ல தாலிபான்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.


latest tamil news


இதுவரை ஒரு லட்சத்து 24 ஆயிரம் ஆப்கன் மக்கள் மீட்பு விமானங்கள் மூலமாக தலைநகர் காபூலில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறுகையில், உலக அளவில் எந்த ஒரு நாடும் தலிபான் ஆட்சியை மதிக்காது என்று தெரிவித்துள்ளார். தலிபான்கள் ஆட்சியில் வாழப் பிடிக்காத குடிமக்கள் தாங்கள் விருப்பப்பட்ட நாடுகளுக்கு செல்ல தலிபான்கள் அனுமதித்தது உலக நாடுகள் சிலவற்றால் வரவேற்கப்படுகிறது.

ஐரோப்பிய யூனியன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தலிபான்களின் புதிய ஆட்சி குறித்து கூறுகையில் வன்முறையை தவிர்த்து தலிபான் அமைதியாக ஆட்சி மேற்கொண்டால் தாங்கள் தலிபான் ஆட்சியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். தலிபான்கள் ஆட்சியை ஏற்கனவே சீன அரசு அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-செப்-202118:48:59 IST Report Abuse
தமிழ்கிறுக்கன் சீனனுக்கு தாலிபான் மேலே அவ்ளோ பயம். அது தான் மேட்டரு.
Rate this:
Cancel
SUDHAKAR - Dublin,அயர்லாந்து
09-செப்-202118:44:54 IST Report Abuse
SUDHAKAR சீனா அங்கீகாரம் அளித்துள்ளது இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது இது ஏற்கனவே முடிவு செய்தது தானே சீனாவுக்கு பாகிஸ்தான்னுடன் மேலும் ஒரு அடிமை கிடைத்து இருக்கிறது இனிமேல் இந்தியா மேலும் ஐரோபியின் உணின் நாடுகளை வெகுவாக மிரட்டலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X