\காபூல்: தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து உள்ள நிலையில் அங்கு பல்வேறு அடக்குமுறை சம்பவங்கள் நாளுக்குநாள் அரங்கேறி வருகின்றன.
சமீபத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற சர்வதேச ஊடகவியலாளர்கள் தாலிபான்களால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல தலிபான்களின் அடக்குமுறை காரணமாக பெண் நீதிபதிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்கர்கள் உட்பட 200 வெளிநாட்டவர்கள் நாட்டவர்களை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியே செல்ல தாலிபான்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதுவரை ஒரு லட்சத்து 24 ஆயிரம் ஆப்கன் மக்கள் மீட்பு விமானங்கள் மூலமாக தலைநகர் காபூலில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறுகையில், உலக அளவில் எந்த ஒரு நாடும் தலிபான் ஆட்சியை மதிக்காது என்று தெரிவித்துள்ளார். தலிபான்கள் ஆட்சியில் வாழப் பிடிக்காத குடிமக்கள் தாங்கள் விருப்பப்பட்ட நாடுகளுக்கு செல்ல தலிபான்கள் அனுமதித்தது உலக நாடுகள் சிலவற்றால் வரவேற்கப்படுகிறது.
ஐரோப்பிய யூனியன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தலிபான்களின் புதிய ஆட்சி குறித்து கூறுகையில் வன்முறையை தவிர்த்து தலிபான் அமைதியாக ஆட்சி மேற்கொண்டால் தாங்கள் தலிபான் ஆட்சியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். தலிபான்கள் ஆட்சியை ஏற்கனவே சீன அரசு அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE