பொது செய்தி

இந்தியா

பாராலிம்பிக் வீரர்களுக்கு விருந்தளித்து பிரதமர் பாராட்டு

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம் உட்பட 19 பதக்கங்கள் பெற்றது. பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்கள் மற்றும்

புதுடில்லி: பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.latest tamil news


பாராலிம்பிக் வீரர்களுக்கு விருந்தளித்த பிரதமர்

சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம் உட்பட 19 பதக்கங்கள் பெற்றது. பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு, பிரதமர் மோடி இன்று தனது இல்லத்தில் விருந்து அளித்து கலந்துரையாடினார்.


latest tamil newsஅப்போது பிரதமர் பேசுகையில், பாராலிம்பிக் சாதனைகளை டோக்கியோ ஒலிம்பிக் முறியடித்து விட்டது. போட்டிகளில் வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்த வீரர்களுக்கு பாராட்டுகள். அவர்களின் இந்த சாதனை, விளையாட்டு சமூகத்திற்கு ஊக்கமளிக்கும். விளையாட்டுகளில் முன்னேற இளம் வீரர்களுக்கு எழுச்சியூட்டும். அவர்களின் செயல்திறனால் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு பெருமளவு அதிகரித்து உள்ளது.


latest tamil newsபாராலிம்பிக் தடகள வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு கடினமான தடைகளை கருத்தில் கொண்டு இந்த செயல் திறன் போற்றத்தக்கது. உண்மையான விளையாட்டு வீரர், வெறும் தோல்விகளால் துவளாமல் முன்னேறி செல்வார். அந்த பாராலிம்பிக் வீரர்கள் தான் நாட்டின் தூதர்கள். தங்கள் குறிப்பிடத்தக்க செயல்திறனால், உலக அரங்கில் நாட்டின் புகழை உயர்த்தி உள்ளனர். இவ்வாறு பிரதமர் கூறினார்.


latest tamil newsபல்வேறு வீரர்கள், தாங்கள் பதக்கம் வென்ற விளையாட்டு உபகரணங்களில் கையெழுத்திட்டு பிரதமருக்கு பரிசாக வழங்கினர்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - tiruchi,இந்தியா
10-செப்-202101:02:22 IST Report Abuse
babu எதிர் கட்சி குறைகூற கூடி வரூவாங்க
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-செப்-202123:02:43 IST Report Abuse
Pugazh V மாஸ்க் மண்ணாங்கட்டி சமூக இடைவெளி கோவிட் பாதுகாப்பு என்று எதுவும் இல்லாமல்... பிரதமர். ஆனால் இதை மறைத்து செய்தி கருத்து எல்லாம் போடுகிறார்கள். இவருக்குP.A, யாரும் இல்லியா? அல்லது போட்டோவுக்காக இப்படி என்று நினைக்கிறேன். கேவலமா இருக்கு.
Rate this:
Cancel
09-செப்-202122:35:51 IST Report Abuse
அப்புசாமி ஜனாதிபதி கூட பிசியா இருப்பாரு போலிருக்கு. பெரியவர் ரொம்ப ஃப்ரீயா எல்லோருக்கும் பார்ட்டி குடுக்குற அளவுக்கு நேரம் இருக்கு.
Rate this:
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
10-செப்-202106:54:57 IST Report Abuse
Yezdi K Damoசாதாரணமாக பதினெட்டு மணி நேரங்கள் கடுமையாக இந்தியாவின் முன்னேற்றத்துக்கு உழைக்கும் ஒரே ஒரு பிரதமர் நம்ம மோடி ஒருவர்தான் . இந்த பார்ட்டி வைபோகத்துக்காக இரண்டு மணி நேரங்கள் ஓவர் டைம் செஞ்சிருக்காருன்னா பாத்துக்குங்களேன் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X