2014 முதல் 2021 வரையில் எம்.எல்.ஏ., எம்.பிக்கள் 35 சதவீதம் பா.ஜ.,வில் இணைவு

Updated : செப் 09, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரையில் சுமார் 35 சதவீத அளவிற்கு மாற்று கட்சியினர் பா.ஜ.,வில் இணைந்துள்ளனர். இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த 2014 ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைத்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கடந்த 2019 ம் ஆண்டிலும் மத்தியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியது. மேலும் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ., தனிப்பெரும் பான்மையுடனும்,

புதுடில்லி: கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரையில் சுமார் 35 சதவீத அளவிற்கு மாற்று கட்சியினர் பா.ஜ.,வில் இணைந்துள்ளனர்.



latest tamil news




இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த 2014 ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைத்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கடந்த 2019 ம் ஆண்டிலும் மத்தியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியது. மேலும் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ., தனிப்பெரும் பான்மையுடனும், கூட்டணி கட்சி ஆதரவுடனும் ஆட்சி அமைத்தது.

இதனையடுத்து காங்கிரஸ் திரிணமுல் காங்கிரஸ், மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுக்கு கட்சியில் மதிப்பு தரவில்லை அல்லது முக்கியத்துவம் குறைந்து வருகிறது என்று கருதி பா.ஜ.,வில் இணைந்தனர். இவர்களில் குறிப்பிடத்தவர்கள் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம் கிருஷ்ணா, என்.டி.திவாரி, நாராயண் ராணே, மற்றும் சங்கர் சிங் வகேலா ஆகியோர் ஆவர்.

இது குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் தெரிவித்து இருப்பதாவது: 2014 ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நடைபெற்ற தேர்தலின் போது போட்டியிட்ட வேட்பாளர்களான எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் குறித்து ஆராயப்பட்டது. இதில் 22 சதவீதம் பேர் அதாவது 253 பேர் பா.ஜ.,விலும், 10 சதவீதம் (115 பேர்) அளவிற்கு காங்., கட்சியிலும் இணைந்தனர். 6 சதவீதம் பேர் பிஎஸ்.பி.,கட்சியில் இணைந்துள்ளனர்.


latest tamil news



மேலும் 35 சதவீதம் அளவிற்கு அதாவது 177 எம்.பி., எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியை விட்டுவிலகி பா.ஜ.,வில் சேர்ந்துள்ளனர் அதே நேரத்தில் 7 சதவீதம் அளவிற்கு மட்டுமே பா.ஜ.,வில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்துள்ளனர். திரிணமுல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய 6 சதவீதம் பேர் பா.ஜ.,வில் இணைந்துள்ளனர். இவ்வாறு அதன் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-செப்-202123:12:05 IST Report Abuse
Pugazh V அதாவது பாஜக 35% காங்கிரஸ் காரர்கள் நிறைந்த கட்சி. இது அப்படி யே கொஞ்சம் கொஞ்சமாக ஒரு 65% , 70% ஆகிவிட்டால், பாஜகவிற்குக் கூட நல்ல புத்தி வந்து இந்திய மக்களின் நலனுக்காகச் செயல்பட ஆரம்பித்து விடும்.
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
09-செப்-202122:10:31 IST Report Abuse
Elango இதில் 30% திருடர்கள்,ரவுடிகள்,பொறம்போக்கு உள்ளனர்....5% மிரட்டி மாற்றம் செய்து உள்ளனர்....அவர்களது பிரச்சினையை இவர்களுக்கு சாதகமாக்கி கொள்வது..
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
09-செப்-202121:13:19 IST Report Abuse
Visu Iyer அப்படின்னா இது காங்கிரஸ் கட்சின்னு சொல்லுங்க.. காங்கிரஸ் கொள்கையை தான் பாஜக செய்யுதுன்னா அப்போ பாஜக எதுக்கு என்று சிந்தனை வருதா...? பொறுமையா யோசித்து பாருங்க... எழுபது வருட இந்திய இந்த ஏழு ஆண்டுகளில் எப்படி இருக்குன்னு பாருங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X