சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

வெற்றி கஷ்டம் தான்!

Added : செப் 09, 2021 | கருத்துகள் (1)
Advertisement
வெற்றி கஷ்டம் தான்!'இவர்கள் அடிக்கிற கூத்தைப் பார்த்தால் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை பிடிப்பது, இந்த ஜென்மத்தில் நடக்காது போலிருக்கிறது' என, விரக்தியுடன் கூறுகின்றனர், அந்த மாநில காங்கிரஸ் தொண்டர்கள். காங்கிரசில் கோஷ்டி பூசலுக்கு பஞ்சம் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் கூட, நிர்வாகிகள் பல பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.

அக்கம் பக்கம்


வெற்றி கஷ்டம் தான்!



'இவர்கள் அடிக்கிற கூத்தைப் பார்த்தால் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை பிடிப்பது, இந்த ஜென்மத்தில் நடக்காது போலிருக்கிறது' என, விரக்தியுடன் கூறுகின்றனர், அந்த மாநில காங்கிரஸ் தொண்டர்கள். காங்கிரசில் கோஷ்டி பூசலுக்கு பஞ்சம் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் கூட, நிர்வாகிகள் பல பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் கோஷ்டி பூசல் உச்சத்தில் உள்ளது. இதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு இப்போது கர்நாடகாவில் கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுகிறது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் பல கோஷ்டிகளாக செயல்பட்டாலும், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் சிவகுமாருக்கு இடையிலான தகராறு தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரது ஆதரவாளர்களும் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் ஒருவர் மீது ஒருவர் புழுதிவாரி துாற்றுகின்றனர். சமீபத்தில் பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், சித்தராமையாவும், சிவகுமாரும் மேடையில் அருகருகில் அமர்ந்திருந்தனர். ஆனால் அவர்களது ஆதரவாளர்கள், இருவரது பெயரையும் கூறி, வாழ்த்தி கோஷமிட்டனர். அதிலும் சிவகுமாருக்கு ஆதரவான கோஷங்கள் அதிகம் இருந்தன. அவரது, 'கட் அவுட்'டுகளுக்கும் குறைவில்லை. இதைப் பார்த்த காங்., தொண்டர்கள், 'கட்சியை விட தங்கள் சுய புராணம் தான் பெரிது என்ற மனப்பான்மை இவர்களிடம் இருக்கும் வரை, தேர்தல் வெற்றி கஷ்டம் தான்' என, ஆதங்கப்படுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
10-செப்-202118:07:06 IST Report Abuse
r.sundaram எப்படியோ காங்கிரஸ் காணாமல் போனால் சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X