சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அந்த மேலிடம் யார்?

Added : செப் 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அந்த மேலிடம் யார்?சி.கலாதம்பி, பட்டுக்கோட்டையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மது குறித்து பேசினால், 'இமேஜ்' போய்விடுமே...' என்ற அச்சம் இருப்பதால், 'டாஸ்மாக்' கடைகளில் நடக்கும் கொள்ளையை யாரும் கண்டுகொள்வதில்லை.கசப்பாக இருந்தாலும் சில உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்; வேறு வழியில்லை.தமிழகத்தில் இனி மது விலக்கு என்பது சாத்தியமில்லை. மதுவிற்கு தடை


அந்த மேலிடம் யார்?சி.கலாதம்பி, பட்டுக்கோட்டையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மது குறித்து பேசினால், 'இமேஜ்' போய்விடுமே...' என்ற அச்சம் இருப்பதால், 'டாஸ்மாக்' கடைகளில் நடக்கும் கொள்ளையை யாரும் கண்டுகொள்வதில்லை.கசப்பாக இருந்தாலும் சில உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்; வேறு வழியில்லை.தமிழகத்தில் இனி மது விலக்கு என்பது சாத்தியமில்லை. மதுவிற்கு தடை விதித்தால், மாற்று வழியில் போதை தேடும் தலைமுறை உருவாகி விட்டது. அது மிக ஆபத்தானது. எனவே மது விற்பனை தொடரும்.
குழந்தை பிறப்பு முதல், மரணம் நிகழ்ந்த வீடு வரை எல்லா நிகழ்வுகளிலும் மது இடம்பிடித்து விட்டது. டாஸ்மாக் கடைகளில் மது வெள்ளம் பாய்ந்தோடுகிறது.ஆகவே, மது இல்லாத தமிழகம் இனி இல்லை என்பதை அனைவரும் முதலில் ஏற்க வேண்டும்.சரி, விஷயத்திற்கு வருவோம்... தற்போது டாஸ்மாக் கடையில் அதிகபட்ச விலையை விட ௧ குவார்ட்டர் பாட்டிலுக்கு, கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் பகிரங்கமாக கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் 5,000த்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஒரு கடையில், ஒரு மாதத்திற்கு 3.12 லட்சம் ரூபாய் கறுப்பு பணம் சேர்கிறது. அப்படியென்றால், தமிழகம் முழுதும் 170 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு 2,028 கோடி ரூபாய்!இவ்வளவு தொகை யாருக்கு போகிறது? மது விற்பனையாளர்களை கேட்டால், 'மேலிடத்திற்கு செல்கிறது' என சொல்கின்றனர். இந்த முறைகேட்டை, 'ஆன்லைன்' மது விற்பனை வாயிலாக தடுக்க முடியும். மேலும், ஆன்லைன் விற்பனை பல்வேறு பயன்களும் உண்டு.மது அருந்துவோர் வயது உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ளலாம். சிறுவர்களுக்கு மது கிடைப்பதை தடுக்க இயலும்.மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் தான் சாலை விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன. ஆன்லைன் விற்பனையால் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
இன்னும் சொல்வதென்றால், வீட்டில் அமர்ந்து மது அருந்துவதால், பொதுவெளியில் சமூக குற்றங்கள் நடப்பதும் பெருமளவு குறையும்.டாஸ்மாக் கடையில் கூட்டம் குறையும்; கொரோனா பரவலையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.ஆன்லைன் மது விற்பனை, முறைகேட்டை தடுப்பதுடன், எண்ணற்ற நல்ல விஷயங்களையும் செய்யும்.
அப்படி இருக்கும்போது, 'ஆன்லைன் மது விற்பனை செய்யும் எண்ணம் இல்லை' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது என்றால், என்ன அர்த்தம்?
டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறும் அந்த மேலிடம் யார்?


மகளிர் காங்கிரசாரின் பதில் என்ன?கே.பாரதி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சில நாட்களுக்கு முன், சென்னை வள்ளுவர் கோட்டத்தின் முன், ஆபாச 'வீடியோ'வில் சிக்கிய, பா.ஜ., முன்னாள் பொதுச் செயலர் கே.டி.ராகவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மகளிர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது.
அதில் பங்கேற்ற மகளிர் காங்., உறுப்பினர்கள், 'கைது செய், கைது செய்... கே.டி.ராகவனை கைது செய்' என தொண்டை கிழிய கத்தி, மக்களுக்கு வேடிக்கை காட்டினர்.பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்பதே நம் குறிக்கோள்; அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இந்த மகளிர் காங்கிரசார் நடத்திய ஆர்ப்பாட்டம் தான் நெருடுகிறது.முன்னாள் நிதி அமைச்சரும், 75 முறைகளுக்கும் மேல் ஜாமின் பெற்றவருமான சிதம்பரம், ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டோரில் முக்கியமானவர்.அந்த வழக்கில், 'அப்ரூவர்' ஆன இந்திரானி முகர்ஜி, சி.பி.ஐ.,யிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், 'ஒரு மில்லியன் டாலர் பணம் கொடுத்ததோடு, என் உடலையும் பலமுறை சிதம்பரத்திற்காக கொடுத்திருக்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
டில்லி லோதி சாலையில் உள்ள சி.பி.ஐ., தலைமை அலுவலகத்தில் நடக்கும் விசாரணை குறித்த விபரங்கள், தமிழக மக்களுக்கு எங்கே தெரியப் போகிறது என்ற எண்ணத்தில், காங்., மகளிர் அணியினர் கூப்பாடு போட்டுள்ளனர்.'கே.டி.ராகவனை கைது செய்...' என முழங்கிய மகளிர் காங்கிரசார், சிதம்பரத்தை கைது செய்ய வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தின் முன் போராட்டம் நடத்துவரா?
அந்த போராட்டத்தைக் காண காத்திருக்கிறோம்!


கோவில் சொத்துக்களை மீட்பரா?வி.ஹெச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் சொத்து குறித்த விபரங்களை, 'டிஜிட்டல்' மயமாக்கி இணையதளத்தில் வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது வரவேற்க வேண்டியதே.'கோவில் சொத்துக் களை முறையாக பராமரிக்க வேண்டும். அதில் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தி கோவில்களை மேம்படுத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.கோவில்கள் என்பன புராதன சின்னங்கள் மற்றும் பண்டைய நாகரிகத்தின் அடையாளங்கள். கலை, விஞ்ஞானம், சிற்பக்கலை ஆகியவற்றில் நம் முன்னோர் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதற்கான ஆதாரங்களாக விளங்குகின்றன.அறநிலையத் துறை ஆணையரின் அறிக்கையின்படி, 5.17 லட்சம் ஏக்கர் அசையா சொத்துக்கள் கோவில்களுக்கு உள்ளன. ஆனால் இன்று கோவில்களின் பயன்பாட்டில், 4.78 லட்சம் ஏக்கர் நிலம் தான் உள்ளது. 39 ஆயிரம் ஏக்கர் நிலம், ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளது.
அந்த நிலங்களை மீட்க, அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முற்காலத்தில் பிரசாதம், அன்னதானம், அர்ச்சகர் ஊதியத்துக்காக, கோவில் நிலத்தில் விவசாயம் செய்து நெல் கொடுக்க குத்தகைக்கு விட்டனர். நாளடைவில் குத்தகைதாரர், கோவிலுக்கு நெல் கொடுப்பதை நிறுத்தினார்.

தக்கார் பதவிக்கு வருபவருக்கு, கோவிலின் சொத்து பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் தொலைந்தது. நேர்மையான அதிகாரிகள், உள்ளூர் கட்சி பிரமுகர்களால் மிரட்டப்பட்டனர். கோவில் சொத்து சூறையாடப்பட்டது.முதல்வர் ஸ்டாலின் மதச்சார்பற்ற ஆட்சி நடத்த விரும்பினால், கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-செப்-202115:56:08 IST Report Abuse
D.Ambujavalli சந்தேகம் வேறா? மேலிடம் தானே மது ஆலைகளை நடத்தி, தமது ஆட்கள் மூலமே விலை ஏற்றும் கமிஷனும் சேரவேண்டிய விகிதத்தில் செய்து விடும் பின்னே, ஏழு தலைமுறைக்கு எப்படி சொத்து சேர்ப்பதாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X