சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : செப் 09, 2021
Share
Advertisement
'மோடி அரசுக்கு எதிராக தமிழக அரசு எதை செய்தாலும், முதலில் பாராட்டுவது உங்கள் கட்சி தான். அந்த வகையில் இந்த பாராட்டு நாட்டின் நலன் கருதியல்ல; உங்கள் கட்சியின் நலன் கருதி மட்டுமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், காங்., பெண் எம்.பி., ஜோதிமணி அறிக்கை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்கிறேன். இந்த சட்டம்

பேச்சு, பேட்டி, அறிக்கை

'மோடி அரசுக்கு எதிராக தமிழக அரசு எதை செய்தாலும், முதலில் பாராட்டுவது உங்கள் கட்சி தான். அந்த வகையில் இந்த பாராட்டு நாட்டின் நலன் கருதியல்ல; உங்கள் கட்சியின் நலன் கருதி மட்டுமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், காங்., பெண் எம்.பி., ஜோதிமணி அறிக்கை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்கிறேன். இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு இந்தியருக்கும் எதிரானது.



'எப்படியோ உங்களின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் வாயால் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர்...' எனக், கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி., ரவிகுமார் என்னுடன் சில விவாதங்களில் பங்கேற்றுள்ள போது, இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் இல்லை; தி.மு.க., - எம்.பி., என கூறியுள்ளேன். அப்போது மறுத்த, இப்போது நீதிமன்றத்தில் தி.மு.க., - எம்.பி., தான் எனக் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே இனிமேல் அவர் தி.மு.க., பிரதிநிதி தான்.


'வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுகளை அள்ள, தி.மு.க., கூட்டணி தயாராகிவிட்டது போலும்...' எனக், கூறத் துாண்டும் வகையில், மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை:
அகதிகளாக புகலிடம் தேடி வருவோரை, மத அடிப்படையில் பாகுபடுத்திய குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்க்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம் வரவேற்பிற்குரியது.


'போராடியவர்கள் மீதான வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இப்போது சட்டமும் தள்ளுபடியாகி விட்டது. அனுபவியுங்கள்...' எனக், கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி இணைச் செயலர் சல்மா அறிக்கை:
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக சமூக செயல்பாட்டாளர்கள் எந்த அளவு போராடினர் என்பதை அறிவோம். இன்று ஒற்றை தீர்மானத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களின் ஒற்றை நம்பிக்கை ஸ்டாலின் தான். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை.


'உண்மையில் வரவேற்கக் கூடிய ஒன்று தான். எனினும், வியாபார நேரங்களிலும் இருக்கையில் அமர்ந்திருந்தால், வியாபாரம் படுத்து விடுமே...' எனக், கூறத் தோன்றும் வகையில், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் அறிக்கை:
கடைகளில் பணியாற்றுவோருக்கு இருக்கை வசதி அளிக்க வேண்டும் என, 2017லேயே கேரள அரசு சட்டம் கொண்டு வந்து விட்டது. அதுபோன்ற சட்டம், தமிழகத்தில் வேண்டும் என்ற எங்களின் தொடர் கோரிக்கையை நிறைவேற்றியுள்ள முதல்வருக்கு நன்றி.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X