பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
செப்., 10, 1911தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவிரியில் 1846 ஏப்., 12ம் தேதி பிறந்தவர், ஸ்ரீ சீனிவாச சாஸ்திரிகள். திண்ணை பள்ளியில் வேதம் பயின்றார். 'பிரம்மவித்யா' என்ற ஆன்மிக கையெழுத்து இதழை நடத்தினார். புதுக்கோட்டை மன்னரின் நிதி உதவியுடன், காலடியில் ஆதிசங்கரர் ஸ்ரீமடத்தை நிர்மாணித்தார். சமஸ்கிருதத்தில் பல்வேறு நுால்கள் எழுதியுள்ளார்.வைத்தியநாத தீட்சிதரின், 'சப்த


இதே நாளில் அன்று


செப்., 10, 1911



தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவிரியில் 1846 ஏப்., 12ம் தேதி பிறந்தவர், ஸ்ரீ சீனிவாச சாஸ்திரிகள். திண்ணை பள்ளியில் வேதம் பயின்றார். 'பிரம்மவித்யா' என்ற ஆன்மிக கையெழுத்து இதழை நடத்தினார். புதுக்கோட்டை மன்னரின் நிதி உதவியுடன், காலடியில் ஆதிசங்கரர் ஸ்ரீமடத்தை நிர்மாணித்தார். சமஸ்கிருதத்தில் பல்வேறு நுால்கள்
எழுதியுள்ளார்.வைத்தியநாத தீட்சிதரின், 'சப்த காண்டங்கள்' எனும் சமஸ்கிருத நுாலை, எளிதில் புரியும்படி தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழகம் எங்கும் பயணம் செய்து, சிதிலமடைந்திருந்த பல கோவில்களை சீரமைத்து திருப்பணி மேற்கொண்டார். சிருங்கேரி ஸ்ரீமடத்தின் ஆஸ்தான பண்டிதராகவும்
இருந்துள்ளார்.கடந்த 1872ல், 'பிளேக்' நோய் பரவிய போது, அனைவருக்கும் பாரபட்சமின்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என போராட்டம் நடத்தி, அதில் வெற்றி பெற்றார். 1911 செப்., 10ம் தேதி தன் 65வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
ஸ்ரீ சீனிவாச சாஸ்திரிகள், காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
12-செப்-202103:48:44 IST Report Abuse
meenakshisundaram இவரை போன்றோரின் சேவைகள் தினமலர் ஒன்றினாலேயே வெளியே தெரிய வருகின்றது .வாழ்க பத்திரிக்கை தர்மம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X