சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு'

Added : செப் 09, 2021 | கருத்துகள் (1)
Share
சட்டசபையில் நடந்த விவாதம்:எதிர்கட்சி தலைவர் பழனிசாமி: அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை உட்பட அனைத்து இடங்களிலும், சி.சி.டி.வி., கேமரா அமைத்து கண்காணிக்கப்பட்டது. இதன் வாயிலாக குற்றங்கள் குறைந்ததுடன், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். போலீசார் பயன்பெறுவதற்காக, உங்கள் சொந்த இல்லம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த சிறப்பான திட்டத்தை தொடர வேண்டும்.ச ட்டசபை நிகழ்ச்சிகளை,

சட்டசபையில் நடந்த விவாதம்:

எதிர்கட்சி தலைவர் பழனிசாமி:

அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை உட்பட அனைத்து இடங்களிலும், சி.சி.டி.வி., கேமரா அமைத்து கண்காணிக்கப்பட்டது. இதன் வாயிலாக குற்றங்கள் குறைந்ததுடன், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். போலீசார் பயன்பெறுவதற்காக, உங்கள் சொந்த இல்லம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த சிறப்பான திட்டத்தை தொடர வேண்டும்.ச ட்டசபை நிகழ்ச்சிகளை, 'டிவி'யில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, பலமுறை முதல்வர் வலியுறுத்தினார். இப்போது அவர், அதை நடைமுறைப்படுத்த வேண்டும். நாங்கள் அதை நடைமுறைப்படுத்த முற்பட்ட போது, ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்:

சட்டசபை நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என ஒருமுறை அல்ல; பத்து ஆண்டுகளாக தொடர்ந்து நாங்கள் கேட்டுக் கொண்டே இருந்தோம். அப்போது ஆட்சியில் இருந்த நீங்கள், அதை செய்ய முன்வரவில்லை. சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கில் நடப்பதால், அந்த முயற்சியில் நாங்கள் இறங்க முடியவில்லை. புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டம் நடக்கும் போது, நேரடியாக ஒளிபரப்பக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி தருவோம்.

உங்கள் சொந்த இல்லம் திட்டம் குறித்த உண்மை நிலையை எங்களிடம் கேட்பதை விட, போலீசாரிடம் கேட்டால் தெரியும். வீடுகளின் தரம் குறைவாக உள்ளது. போதிய அடிப்படை வசதிகள் இல்லை. விண்ணப்பங்கள் செய்தும், முன்பணம் செலுத்தியும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், விண்ணப்பித்தவர்கள் பலர் ஓய்வு பெற்று விட்டனர். இதுதான் இப்போதுள்ள சூழ்நிலை.

இந்த அரசை பொறுத்தவரை நீங்கள் கொண்டு வந்த திட்டம் என்பதால் கைவிட மாட்டோம். அதை போலீசார் மகிழ்ச்சி அடையும் வரை சிறப்பாக நிறைவேற்றுவோம்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X