மம்தாவுக்கு எதிராக பா.ஜ., நிறுத்தப் போவது யார்?:

Updated : செப் 10, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் பவானிபுர் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தொகுதியில் போட்டியிடும் முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜிக்கு எதிராக, பா.ஜ., யாரை நிறுத்தப் போகிறது என்பதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அதில், மேற்கு
மம்தா, பா.ஜ., நிறுத்தப் போவது.யார்?  மேற்கு வங்கம், இடைத் தேர்தலில் எதிர்பார்ப்பு

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் பவானிபுர் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தொகுதியில் போட்டியிடும் முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜிக்கு எதிராக, பா.ஜ., யாரை நிறுத்தப் போகிறது என்பது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அதில், மேற்கு வங்கத்தில் 213 இடங்களில் வென்று திரிணமுல் காங்., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது.திரிணமுல் காங்.,கில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும்படி மம்தாவுக்கு சவால் விடுத்திருந்தார். அந்தத் தொகுதியில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார்.தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற மம்தா பானர்ஜி, ஆறு மாதங்களுக்குள் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


30ம் தேதி தேர்தல்



இந்நிலையில், மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள பவானிபுர், ஜாங்கிபுர், சமர்கஞ்ச் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. வரும் 30ம் தேதி நடக்கும் தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள், அக்., 3ல் எண்ணப்பட உள்ளன.கடந்த 2011, 2016 தேர்தல்களில் பவானிபுர் தொகுதியில் இருந்து தான் மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டார்.அந்தத் தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற திரிணமுல் கட்சியின் சோபன்தேவ் சாட்டர்ஜி, மம்தாவுக்கு தற்போது தன் பதவியை ராஜினாமா செய்தார்.திரிணமுல் சார்பில் பவானிபுர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என காங்., அறிவித்துள்ளது.


கடும் சவால்



சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்.,குக்கு கடும் சவால் விடுத்த பா.ஜ., இந்த இடைத் தேர்தலில், மம்தாவுக்கு எதிராக யாரை நிறுத்தப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.ஆறு பேர் அடங்கிய பட்டியலை கட்சித் தலைமைக்கு, மேற்கு வங்க பா.ஜ., அனுப்பியுள்ளது. அதில் முன்னிலையில் இருப்பவர் பெண் வழக்கறிஞர் பிரியங்கா திப்ரேவால், 40.
கட்சியின் மேற்கு வங்க இளைஞர் பிரிவுத் தலைவராக உள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக வழக்குகளை தொடுத்தார்.அதன் அடிப்படையில் சி.பி.ஐ., விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையில் கொல்லப்பட்ட கட்சித் தொண்டர் அபிஜித் சர்க்காரின் சகோதரர் பிஸ்வஜித் சர்க்காரின் பெயரும் பட்டியலில் இடம்பெற்று உள்ளது.


பரிந்துரை



சகோதரர் கொலைக்கு எதிராக வழக்குகள் தொடர்ந்து, கட்சித் தலைமையின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் மனித உரிமை ஆணையத்திலும் சகோதரரின் கொலைக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.மேகாலயா, திரிபுரா கவர்னராக இருந்த மூத்த தலைவர் ததாகதா ராயின் பெயரும் பட்டியலில் உள்ளது.'மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் கட்சியின் தோல்விக்கு சில தலைவர்களே காரணம்' என, அவர் குற்றஞ்சாட்டி கடுமையாக விமர்சித்திருந்தார்.கடந்த சட்டசபை தேர்தலில் பவானிபுர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ருத்ரானில் கோஷின் பெயரும் பரிந்துரை பட்டியலில் உள்ளது.இவர்களில் யாரை பா.ஜ., கட்சித் தலைமை வேட்பாளராக அறிவிக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு, மேற்கு வங்க அரசியலில் பரவலாக உள்ளது.


பாடம் கற்பர்!



மம்தா பானர்ஜிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தினால், அது பா.ஜ.,வுக்கே உதவும் என்பதை காங்., உணர்ந்துள்ளது நல்ல விஷயம். பா.ஜ.,வைப் பொறுத்தவரை கட்சித் தலைமையே நின்றாலும் எங்களுக்கு கவலைஇல்லை. எதிர்காலத்தில் மற்றொரு தேர்தலில் போட்டியிட பலமுறை யோசிக்கும்அளவுக்கு கடுமையான தோல்வியைஅவர்கள் சந்திப்பர். இந்த இடைத் தேர்தலில் பா.ஜ., நல்ல பாடத்தை கற்கும்.தபஸ் ராய்செய்தித் தொடர்பாளர், திரிணமுல் காங்.,

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
10-செப்-202114:46:45 IST Report Abuse
வெகுளி காங். மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற உதிரிக்கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனவா?....
Rate this:
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
10-செப்-202107:49:29 IST Report Abuse
ganesha அங்கேயும் உ பி ஸ் கல் இருக்கும் வரை அந்த மாநிலமும் உருப்படாது. பாவம் மக்கள்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-செப்-202106:05:24 IST Report Abuse
Kasimani Baskaran சொந்தத்தொகுதியிலே கூட சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க முடியாத இவரெல்லாம் பிரதமரானால் நாடு தாங்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X