கோல்கட்டா : தன் குழந்தையின் தந்தை குறித்து எழும் கேள்விகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக, திரிணமுல் காங்., - எம்.பி., நஸ்ரத் ஜஹான் தெரிவித்து உள்ளார்.
திரிணமுல் காங்., லோக்சபா எம்.பி.,யும், பிரபல நடிகையுமான நஸ்ரத் ஜஹான், 2019ல் நிகில் ஜெயின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். திருமணம் துருக்கியில் நடந்தது. கடந்த ஆண்டு இருவரும் பிரிந்தனர்.அப்போது நஸ்ரத் அளித்த பேட்டியில், 'வெளிநாட்டில் நடந்த எங்கள் திருமணத்தை இந்தியாவில் சட்டப்படி பதிவு செய்யவில்லை.
'எனவே நாங்கள் விவாகரத்து பெற வேண்டிய அவசியமில்லை' என்றார். அது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது கர்ப்பமாக இருந்த நஸ்ரத் கடந்த ஆகஸ்டில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது யாஷ் குப்தா என்பவருடன் நஸ்ரத் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
குழந்தைக்கு தந்தை யார்?
இந்நிலையில் நஸ்ரத் நேற்று கூறியதாவது: இது எனக்கு ஒரு புதிய துவக்கம். எனக்கு பல கடமைகள் உள்ளன. எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும், எனக்கு ஓட்டளித்த மக்களுக்காகவும் பணியாற்ற வேண்டும். எனவே நான் மீண்டும் பணிக்கு வந்துவிட்டேன். கர்ப்பமாக இருந்ததால் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் என்னால் பங்கேற்க இயலவில்லை. குளிர்கால கூட்டத்தொடரில் நிச்சயம் பங்கேற்பேன்.
என் குழந்தையின் தந்தை குறித்து எழும் கேள்விகள் அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன். என் குழந்தைக்கு யார் தந்தை என்பதை, அந்த தந்தை நன்கு அறிவார்.இப்போது நாங்கள் சிறந்த பெற்றோராக இருக்கிறோம். நானும், யாஷ் குப்தாவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE