பொது செய்தி

இந்தியா

பொருளாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது: மத்திய நிதியமைச்சகம்

Updated : செப் 11, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : நாட்டின் அடிப்படை பொருளாதார கட்டமைப்பு வலுவாக உள்ள காரணத்தால், கொரோனா தாக்கத்திலும் வளர்ச்சி சாத்தியமாகி உள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:நடப்பு 2021-22ம் நிதியாண்டின், ஏப்.,- ஜூன் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 20.1 சதவீதமாக
பொருளாதாரம், கட்டமைப்பு,  மத்திய நிதியமைச்சகம்

புதுடில்லி : நாட்டின் அடிப்படை பொருளாதார கட்டமைப்பு வலுவாக உள்ள காரணத்தால், கொரோனா தாக்கத்திலும் வளர்ச்சி சாத்தியமாகி உள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2021-22ம் நிதியாண்டின், ஏப்.,- ஜூன் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 20.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மைனஸ் 24.4 சதவீதமாக பின்னடைவைக் கண்டிருந்தது. வேளாண் துறையில், செப்.,3 நிலவரப்படி கரீப் பருவ சாகுபடி, 101 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில், 9 சதவீதம் குறைந்திருந்தது.நெல் கொள்முதலில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத தயாரிப்பு துறை குறியீடு, 95 சதவீதம் வரை எட்டியுள்ளது.

ஜூலையில், எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி குறியீடு, 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. மின்சாரம், சரக்கு ரயில் போக்குவரத்து, சுங்கச் சாவடி வசூல், 'இ - வே பில், டிஜிட்டல்' பரிவர்த்தனை, விமான சேவை, ஜி.எஸ்.டி., உள்ளிட்டவை வாயிலான வருவாய் அதிகரித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்திலும், இந்திய பொருளாதாரம், வீழ்ச்சியில் இருந்து 'வி' வடிவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு, நாட்டின் அடிப்படை கட்டமைப்பு காரணிகள் வலுவாக உள்ளது தான் காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
14-செப்-202113:22:53 IST Report Abuse
jayvee கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா வாங்கிய மொத்த கடன்தொகை எவ்வளவு என்றும். மாநிலங்கள் தனி தனியாக வாங்கிய தொகை எவ்வளவு என்றும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்..
Rate this:
Cancel
radha - tuticorin,இந்தியா
10-செப்-202120:44:20 IST Report Abuse
radha யாரோட ? பரம ஏழைகளான ஜீ ஜீயோட ஆத்ம நண்பர்களான அம்பானி அதானியோட பொருளாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது. அப்படித்தான சங்கீஸ்.
Rate this:
Cancel
10-செப்-202116:57:08 IST Report Abuse
வேணுகோபால் சு Please don't repeat the same comment
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X