அரசியல் செய்தி

தமிழ்நாடு

சபாநாயகருடன் பழனிசாமி வாக்குவாதம்

Added : செப் 09, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சட்டசபையில் நேற்று போலீஸ், தீயணைப்பு துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், எதிர்க் கட்சி தலைவர் பழனிசாமி பேசிய கருத்துக்கள், ஆதாரமின்றி பேசியதாக சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.அப்போது நடந்த விவாதம்:முதல்வர் ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவர் மேலோட்டமாக சொல்கிறார். ஆதாரமாக சொல்ல வேண்டும்; பத்திரிகை, 'டிவி' செய்தியாக இருந்தாலும்,

சபாநாயகருடன் பழனிசாமி வாக்குவாதம் : சட்டசபையில் திடீர் சலசலப்பு

சட்டசபையில் நேற்று போலீஸ், தீயணைப்பு துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், எதிர்க் கட்சி தலைவர் பழனிசாமி பேசிய கருத்துக்கள், ஆதாரமின்றி பேசியதாக சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.


அப்போது நடந்த விவாதம்:முதல்வர் ஸ்டாலின்:
எதிர்க்கட்சி தலைவர் மேலோட்டமாக சொல்கிறார். ஆதாரமாக சொல்ல வேண்டும்; பத்திரிகை, 'டிவி' செய்தியாக இருந்தாலும், சபாநாயகரிடம் அனுமதி பெற்று சொல்ல வேண்டும்.எனவே ஆதாரத்தை காண்பித்து விட்டு பேச சொல்லுங்கள்.சபாநாயகர்: பத்திரிகை, ஊடகங்களில் வருவது சட்டசபைக்கு ஆதாரமல்ல; எதிர்கட்சி தலைவர் பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது.


எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி:
அப்படி என்றால் எதை பேசுவது. சும்மா வந்து விட்டு தான் செல்ல வேண்டும். ஆதாரம் என்பது அரசிற்கு கிடைக்கும். எதிர்க்கட்சியை பொறுத்தவரை பத்திரிகை; ஊடக செய்தியை வைத்தே பேச வேண்டும்.


முதல்வர்:
இதே வாதத்தை நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது முன்வைத்தோம். அப்போது, அவர் ஏற்றுக் கொண்டாரா; சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது; பேசவிடவில்லை. சட்டப்படி, முறைப்படி, மரபுப்படி சபாநாயகர் அனுமதி பெற்று பேசினால் ஏற்க தயாராக இருக்கிறோம்.பழனிசாமி: நடந்த சம்பவங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எதிர்க்கட்சியின் கடமை. இதில் என்ன தவறு இருக்கிறது.


சபாநாயகர்:
எதிருக்கு எதிராக பதில் சொல்ல விரும்பவில்லை. சட்டசபையில், குட்காவை காட்டியதற்கு வழக்கு போடப்பட்டது. அப்படி இருக்கும் போது ஆதாரத்தை காட்டிவிட்டு பேசினால் பிரச்னை இல்லை. அவ்வாறு இல்லை என்றால், சபை குறிப்பில் இருந்து நீக்கப்படும்.


முதல்வர்:
அரசின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தால், அதை முன்கூட்டியே சபாநாயகர் கவனத்திற்கு கொண்டு வந்து, ஆதாரத்துடன் பேசினால், அதை கேட்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசு தயாராக உள்ளது. செய்தி வந்த அடுத்த வினாடியே நடவடிக்கை எடுப்பது தி.மு.க., அரசு. எங்களுக்கு மடியில் கனம் இல்லை; எனவே வழியில் பயம் இல்லை.


சபாநாயகர்:
ஒரு சம்பவம்நடந்தால், அதை சபை விதிப்படி என் கவனத்திற்கு கொண்டு வரலாம். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரலாம். நேரமில்லா நேரத்திலும் பேசலாம்.தமிழகத்தில் போடப்பட்டுள்ள அனைத்து எப்.ஐ.ஆர்., குறித்து பேசினால், நாட்கள் என்னவாவது. நான்கு ஆண்டுகளாக முதல்வராக இருந்துள்ளீர்கள். இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறீர்கள். இவ்வளவு பெரிய சபையில், இது போன்ற விஷயங்களை சொல்ல வேண்டுமா?


முதல்வர்
: அவர்கள் செய்வதை நாமும் செய்யக்கூடாது. இது, நம் அரசு. ஓட்டு போட்டவர்கள் மட்டுமல்ல; ஓட்டு போடாதவர்கள், இவர்களை, 'மிஸ்' பண்ணி விட்டோம் என்று கூறும் அளவிற்கு அரசு செயல்படும். எதிர்க்கட்சி தலைவர் ஆதாரத்துடன் பேசினால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramshanmugam Iyappan - Tiruvarur,கத்தார்
12-செப்-202118:14:14 IST Report Abuse
Ramshanmugam Iyappan முதல்வர் அவர்கள் எதிர் அணியினர் சொல்வதை புறம் தள்ளுவது அழகல்ல
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
12-செப்-202113:41:49 IST Report Abuse
Hari ஒருவர் என்னான்னு தெரியாமலே வெளிநடப்பு செய்தார் கடந்த பாத்து வருடங்களாக ,இப்போது அவர் உள்ளே ,ஆனால் என்னான்னு தெரிந்த இவரு எதுக்கு வம்புனு சொல்லி கேள்விமட்டும் கேட்கிறார்.நமக்கும் பொழுது போகணும்ல அப்படின்னு முன்பும் பிரயோசனம் இல்லை இன்றும் பிரயோசனம் இல்லை உள்ளே இருந்தாலும் வெளிநடப்பு செய்தாலும் யாரும் சீண்டுவார் இல்லை தமிழனின் அறிவுக்கு இவர்கள் இருவரும் சாட்ச்சி.
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
12-செப்-202113:30:23 IST Report Abuse
Hari இருவரும் அதிமேதாவிகள் ,ஒருவர் முன்னாள் செய்தார் மற்றொருவர் இந்நாள் செய்கிறார் ,ஆனால் மக்களின் துயரம் ஆப்கான் நிலையாக தொடர்கிறது ,பழனிச்சாமியோட அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் பிள்ளையார் பூசைக்கு தடை விதித்த இந்த அரசை பற்றி வாய் திறக்காமல் இருக்க சாமி கும்பிட விருப்பம் இல்லாத இன்றைய முதல்வர் என்ன செய்தார் என விளக்கவேண்டும் நாங்களும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X