அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கோவில் நிலங்களை மீட்கும் பணி தொடரும்'

Updated : செப் 11, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: ''அறநிலையத் துறையின் நிலங்களை மீட்கும் பணி தொடரும்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன்: பண்ருட்டி தொகுதியில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், தனியார் அறக்கட்டளை என்ற பெயரில் ஆக்கிரமித்து வருவதுடன், காலி
'கோவில் நிலங்கள், மீட்பு, பணி தொடரும்'

சென்னை: ''அறநிலையத் துறையின் நிலங்களை மீட்கும் பணி தொடரும்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:

தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன்: பண்ருட்டி தொகுதியில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், தனியார் அறக்கட்டளை என்ற பெயரில் ஆக்கிரமித்து வருவதுடன், காலி மனைகளை விற்று வருகின்றனர். தக்கார் அளவில் நியமிக்கப்படுவோர், 'நோட்டீஸ்' வழங்கக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. புகார் கொடுத்தால், போலீசார் வழக்கு பதிவு செய்வதில்லை. காலியிடங்களை காவல்துறை, வருவாய் துறை உதவியுடன் கையகப்படுத்தி, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு:
உறுப்பினர் கூறியது முன்னர் நடந்தது. பண்ருட்டி தொகுதியில், 118 கோவில் மனைகளில், 75ல் நில அளவீடு முடிந்துள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலங்கள் மீட்கப்படும்.முதல் கட்டமாக, அறக்கட்டளைக்கு சொந்தமான ஏழு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. தவறு நடந்ததால், பரம்பரை அறங்காவலர் நீக்கப்பட்டு, சரக ஆய்வாளர் தக்கராக நியமிக்கப்பட்டுள்ளார்.பட்டா மாற்றம் செய்திருப்பது கண்டறியப்பட்டு, அதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் அறநிலையத் துறை வசப்படுத்தும்.

வேல்முருகன்: அமைச்சர் எடுத்த நடவடிக்கைக்கு நன்றி. நோட்டீஸ் வழங்க சென்றவர் மிரட்டப்பட்டு உள்ளார். தனி நபர்கள், வாகனங்கள் நிறுத்த வாடகை வசூலிக்கின்றனர். அந்த இடத்தை மீட்க வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு: தி.மு.க., ஆட்சியில், யாரும் உருட்டி, மிரட்டி பணிய வைக்க முடியாது. புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அறநிலையத் துறையில், வரலாறு காணாத வகையில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறோம். சென்னை, வடபழநியில், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள, 46 கிரவுண்ட் நிலத்தை கையகப்படுத்த உள்ளோம். நிலங்கள் மீட்பு தொடரும்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
14-செப்-202113:24:12 IST Report Abuse
jayvee கோவில்களை சீரழித்துவிட்டு கோவில் நிலங்களை மீட்கும் ஒரே அரசு இந்த அரசுதான்.. சார் நீங்க நல்லவரா இல்ல கெட்டவர்றா?
Rate this:
Cancel
10-செப்-202118:14:13 IST Report Abuse
அருணா இன்று எங்கள் பண்டிகை இன்றாவது உங்கள் வெற்று அறிவிப்பிற்கு தடைகிடையாதா
Rate this:
Cancel
10-செப்-202118:14:02 IST Report Abuse
அருணா இன்று எங்கள் பண்டிகை இன்றாவது உங்கள் வெற்று அறிவிப்பிற்கு தடைகிடையாதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X