அரசியல் செய்தி

தமிழ்நாடு

நம் ஊரே நமக்கு தெரியவில்லை! அமைச்சர் துரைமுருகன் வேதனை

Added : செப் 09, 2021
Share
Advertisement
சென்னை:''நம் ஊரே நமக்கு தெரியவில்லை,'' என, அமைச்சர் துரைமுருகன் வேதனையுடன் தெரிவித்தார்.சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், 110 விதியின் கீழ், தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை, அறிவியல் ஆய்வு முடிவுகள் அடிப்படையில் அறிவித்தார். அதற்காக, சட்டசபை கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன், தங்கம் தென்னரசு

சென்னை:''நம் ஊரே நமக்கு தெரியவில்லை,'' என, அமைச்சர் துரைமுருகன் வேதனையுடன் தெரிவித்தார்.

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், 110 விதியின் கீழ், தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை, அறிவியல் ஆய்வு முடிவுகள் அடிப்படையில் அறிவித்தார். அதற்காக, சட்டசபை கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன், தங்கம் தென்னரசு ஆகியோரும் பாராட்டி பேசினர்.அப்போது, அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

முதல்வர் அறிவிப்பு நெஞ்சிலே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் படித்ததை உற்றுப் பார்த்தால், தமிழர்களுக்கான ஒரு வரலாற்றை தேடுகிறோம். அகமும், புறமும், அதை பாடிகாட்டுகிற கலிங்கத்து பரணி, ஆடி ஒலிக்கிற சிலம்பம், பாடி மகிழ பத்துப்பாட்டு, தொல்காப்பியம் என, இலக்கண இலக்கியங்களை பெற்றிருந்த தமிழனுக்கு, இன்று பானை ஓடுகளிலே வரலாற்றை தேடுகிறோம்.

கங்கையை வென்றான், கடாரத்தை வென்றான்; யவனத்தில் உலாவினான்; ஈழத்தில் கொடி போட்டான் என்றெல்லாம், பொய் முகத்தை இலக்கியத்தில் கொண்டிருக்கிற தமிழனுக்கு, வரலாற்றை பானை ஓட்டில் தேடுகிறோம்.கிறிஸ்தவ கல்லுாரியில், ஒரு முறை அண்ணாதுரை பேச சென்றபோது, 'என்ன தலைப்பில் பேச' என்று அவர் கேட்டதற்கு, கல்லுாரி முதல்வர், 'தலைப்பில்லை' என்றார். அதைத் தொடர்ந்து, 'தலைப்பில்லை தமிழனுக்கு' என்ற தலைப்பில், அண்ணாதுரை பேசினார்.

அவர் பேசுகையில், ''உலகில் எங்கெல்லாம் நதிகள் உள்ளதோ, அங்கெல்லாம் ஒரு நாகரிகம் இருக்கிறது. கங்கைக்கரை நாகரிகம் உள்ளது. ஆனால், தமிழனுக்கு ஒழுங்கான வரலாறு இல்லை,'' என்றார். நாம் அனைத்தையும் செய்திருக்கிறோம். ஆனால், ஒழுங்கான வரலாற்றை எழுதவில்லை. எழுதியவர்கள் நம்மை குழப்பி விட்டனர். நாம் யாரென்று அடையாளம் தெரியாமல் போனோம். அதைத்தான் கருணாநிதி, தமிழகத்துக்கு முழு வரலாறு இல்லை என்றார்.

கல்லணை கட்டிய கரிகாலன், கிறிஸ்து பிறப்பதற்கு முன் கட்டினான். ஒரு புத்தகத்தில், 7ம் நுாற்றாண்டில் கட்டியதாக எழுதி உள்ளனர்.உலகில் செம்மொழிகளில், தமிழ் மட்டும் உயிருடன் உள்ளது. செம்மொழி அந்தஸ்தை கருணாநிதி வாங்கி கொடுத்தார். தமிழன் தாழ்ந்ததற்கு காரணம் நாம் தாம். மனம் வெதும்பிய நிலையில் இருக்கிறது. நமக்கு அடையாளம் தெரியவில்லை.

தக்கோலத்தில் பேசிய போது, 'யானைமேல் துஞ்சித்த ராஜாதித்தன் மரிந்த இடம்' என்றேன். எங்கள் ஊரிலா என்று கேட்கிறான்... நம்மூரே நமக்கு தெரியவில்லை. பானை ஓடு, தமிழ் எழுத்துக்கள் நம்மை காப்பாற்றுகின்றன. அதை தேடி கண்டுபிடிக்க, முதல்வர் வழிகாட்டி உள்ளார். முதல்வர் செய்திருப்பது மகத்தான தொண்டு. தமிழன் இருக்கும் வரை பெயர் இருக்க வேண்டும் என்றால், தொல் பொருள் துறைக்கு உயிர் கொடுங்கள். அதுதான் நம்மை வாழ வைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X