அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதலீட்டாளர் மாநாடு: ஏட்டளவில் ஒப்பந்தம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
அ.தி.மு.க., - பால் மனோஜ் பாண்டியன்: ஜெயலலிதா ஆட்சியில், 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு வந்தது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.கடந்த, 2019 சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வராக இருந்த பழனிசாமி முன்னிலையில், 3.51 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் வழியே, 10.50 லட்சம்

அ.தி.மு.க., - பால் மனோஜ் பாண்டியன்:

ஜெயலலிதா ஆட்சியில், 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு வந்தது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.கடந்த, 2019 சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வராக இருந்த பழனிசாமி முன்னிலையில், 3.51 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் வழியே, 10.50 லட்சம் பேருக்கு, வேலைவாய்ப்பு கிடைக்க வழி செய்யப்பட்டது.

அமைச்சர் தங்கம் தென்னரசு:

இரண்டு முறை நடந்த மாநாட்டில், நீங்கள் கூறிய முதலீட்டில், 25 சதவீதம் மட்டும் தான் வந்தது; வேலைவாய்ப்பு வரவில்லை; மாநாட்டு முதலீடுகள் ஏட்டளவில் உள்ளன.

மனோஜ் பாண்டியன்:

சட்டம் - ஒழுங்கு சரியாக இருந்தால் முதலீடுகள் வரும். ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு சீராக இருந்ததால், வெளிநாட்டினர் முதலீடு செய்தனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு:

அவ்வாறு இருந்திருந்தால், நீங்கள் கூறிய மொத்த முதலீடும் வந்திருக்கும். அது வராததில் இருந்து, சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்பதற்கு அதுவே எடுத்துக்காட்டு.

மனோஜ் பாண்டியன்:

மகளிர் போலீஸ் நிலையத்தை, முதன் முதலில் ஜெயலலிதா அமைத்தார். இந்தியாவில் உள்ள மகளிர் போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கையில், 33 சதவீதம் தமிழகத்தில் உள்ளன. இதற்கான பெருமை, ஜெயலலிதாவை சேரும்.ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், 'போஸ்கோ' வழக்கு பதிவு செய்ய, ஒரு பிரிவும், சைபர் கிரைம் பிரிவும் துவக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அதிக குற்றங்களை தடுக்க முடியும்.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை, விரிவாக்கம் செய்ய வேண்டும். 'ஆன்லைன்' ரம்மியை தடை செய்ய, அ.தி.மு.க., அரசு சட்டம் கொண்டு வந்தது. அதை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதேநேரம், வேறு சட்டம் கொண்டு வரலாம் என தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் செல்லும் திட்டம் உள்ளதா அல்லது புதிய சட்டம் கொண்டு வரப்படுமா?

காவலர்களுக்கு எட்டு மணி நேர வேலை, ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும். நுண்ணறிவுப் பிரிவினருக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை, 5 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், காவலர்களுக்கு எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய பயிற்சி அளிக்க வேண்டும். காவலர்களுக்கு தனி மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்க வேண்டும்.

அமைச்சர் ரகுபதி:

ஆட்சியில் இருந்தபோது, அவர்களால் செய்ய முடியவில்லை. இந்த அரசால் தான் செய்ய முடியும் என கேட்டு வருகிறார்; அதை அரசு செய்யும்.

மனோஜ் பாண்டியன்:

அ.தி.மு.க., ஆட்சியில் ஏராளமானவற்றை செய்துள்ளோம். எஞ்சியதை நிறைவேற்ற கோருகிறோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X