அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா மரண விசாரணை விரைவாக முடிக்க வலியுறுத்தல்

Added : செப் 09, 2021
Share
Advertisement
சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - எம்.எல்.ஏ., சுதர்சனம்: கோடநாடு வழக்கில் விசாரணையை முதல்வர் முடுக்கி விட்டுள்ளார். மற்றொரு வழக்கு ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை. அவர் இறந்த போது, அனைவரும் கண்ணீர் வடித்தோம். அவர் மரணத்தில் உள்ள மர்மம் நீங்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி விசாரித்து வருகிறார். நீதிமன்றத்தில் தடை உள்ளது.

சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - எம்.எல்.ஏ., சுதர்சனம்:

கோடநாடு வழக்கில் விசாரணையை முதல்வர் முடுக்கி விட்டுள்ளார். மற்றொரு வழக்கு ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை. அவர் இறந்த போது, அனைவரும் கண்ணீர் வடித்தோம். அவர் மரணத்தில் உள்ள மர்மம் நீங்கவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி:

இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி விசாரித்து வருகிறார். நீதிமன்றத்தில் தடை உள்ளது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து சட்டசபையில் பேசக்கூடாது.இதை சபை முன்னவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். எனவே, அவர் பேசியதை நீக்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்:

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., வழக்கின் உள்ளே செல்லவில்லை. அதை விரைவாக முடிக்க வேண்டும் என்றே கூறுகிறார். எனவே, சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டியதில்லை.

சுதர்சனம்:

அரசு விரைவாக வழக்கை முடிக்க வேண்டும். கடந்த ஆட்சியில், டி.ஜி.பி., முறைப்படி நியமிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்ற அறிவுரையின்படி, அ.தி.மு.க., ஆட்சி நடக்கவில்லை. தற்போது, தகுதியான நபர்கள் நியமிக்கப்படுகின்றனர். பெண் காவலர்களுக்கு, காலை 7:00 மணிக்கு, 'ரோல்கால்' எடுப்பதை 8:00 மணியாக மாற்ற வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X