துடில்லி : தமிழக கவர்னராக ஆர்.என்.ரவியை 69, நியமித்து ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி நேற்று தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். 1952 ஏப்.,3ல் பீஹாரின்பாட்னாவில் பிறந்தார். 1976ல் கேரள 'பேட்ஜ்' ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். உளவுத்துறையில் சிறப்பு இயக்குனர் உட்பட பல பொறுப்புகளை வகித்த 2012ல் ஓய்வு பெற்றார். 2014 முதல் ஒருங்கிணைந்த உளவுத்துறை தலைவராக இருந்தார். 2018ல் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

நாகலாந்து தனி நாடு கோரிக்கையுடன் பல ஆண்டுகளாக போராடிய தீவிரவாத அமைப்பான நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சிலுடன் (என்.எஸ்.சி.என்.-ஐ.எம்) மத்திய அரசு 2015ல் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த வரலாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றியதில் இவரது பங்கு முக்கியமானது.2019 ஆக.,1ல் நாகலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டார். 2019 டிச., 18 - 2020 ஜன., 26 வரை மேகாலயா கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்தார். தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப், சண்டிகர் கவர்னராக பதவி வகிப்பார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE