பொது செய்தி

தமிழ்நாடு

ஆனந்தத்தை அள்ளி தரும் ஆனிமுத்து பிள்ளையார்

Added : செப் 09, 2021
Share
Advertisement
விருதுநகர்--வேண்டியவைகளை அளிப்பவர், வேதனைகளை தீர்ப்பவர், ஆனந்தத்தை அள்ளித் தருபவர் என விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகில் 1720ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஆனிமுத்து பிள்ளையார். 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் அரசு, வேம்பு இணைந்த மரத்தடியில் உள்ளது. அரச மரமும் வேப்ப மரமும் சேர்ந்து இருப்பது அரிதானதும் விேஷசமானதும் கூட. தினமும் காலை 9:00

விருதுநகர்--வேண்டியவைகளை அளிப்பவர், வேதனைகளை தீர்ப்பவர், ஆனந்தத்தை அள்ளித் தருபவர் என விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகில் 1720ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஆனிமுத்து பிள்ளையார். 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் அரசு, வேம்பு இணைந்த மரத்தடியில் உள்ளது. அரச மரமும் வேப்ப மரமும் சேர்ந்து இருப்பது அரிதானதும் விேஷசமானதும் கூட. தினமும் காலை 9:00 -மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி - இரவு 9:00 வரை திறந்தி ருக்கும் இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. கல்யாண தடை நீங்க, தொழில் அபிவிருத்தி அடைய, குழந்தை பாக்கியம் பெறவும் அருள்பாலிக்கிறார் ஆனிமுத்து பிள்ளையார்.ஆண்டிற்கு ஓரிரு முறை வரும் சோம அமாவாசை அன்று இங்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. திங்கள் கிழமை வரும் சோம அமாவாசை அன்று ஆனிமுத்து பிள்ளையாரை 108 முறை வலம் வந்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டும் என்பது ஐதீகம். 108 முறை பிரதட்சணம் செய்வதால் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும் என்பது திண்ணம்.இக்கோயிலில் கத்தாளம்மன், நாகர், துவாரபாலகி உடன் வீற்றிருக்கிறார். இங்கு தட்சிணாமூர்த்திக்கு வியாழன் தோறும் நடைபெறும் பூஜை பிரசித்தி பெற்றது. இங்குள்ள அரசு, வேம்பு இணைந்த பகுதியில் பக்தர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி மஞ்சள் கயிற்றில் வளையல், தொட்டில் போன்றவைகளை கட்டி வேண்டி கொள்கின்றனர்.எண்ணிய வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் ஆனிமுத்து பிள்ளையாருக்கு சந்தன காப்பு செலுத்துகின்றனர். சங்கடஹரா சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தியில் இங்கு நடக்கும் பூஜை பிரசிதி பெற்றது. இக்கோயிலை டி.ஆர்.சி., அன் பிரதர்ஸ் சந்திரசேகரன் தர்மகத்தாவாக நிர்வகித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X