அரசியல் செய்தி

தமிழ்நாடு

'விவசாய திட்டம் விரைவில் துவங்கும்'

Added : செப் 09, 2021
Share
Advertisement
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - மணிகண்ணன்: உளுந்துார்பேட்டை தொகுதியில், 13 ஆண்டுகளாக, விவசாய மின் இணைப்புக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். இந்த ஆண்டு உளுந்துார்பேட்டை உட்கோட்டத்திற்கு, எவ்வளவு மின் இணைப்பு ஒதுக்கப்பட்டு உள்ளது?அமைச்சர் செந்தில் பாலாஜி: நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - மணிகண்ணன்:

உளுந்துார்பேட்டை தொகுதியில், 13 ஆண்டுகளாக, விவசாய மின் இணைப்புக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். இந்த ஆண்டு உளுந்துார்பேட்டை உட்கோட்டத்திற்கு, எவ்வளவு மின் இணைப்பு ஒதுக்கப்பட்டு உள்ளது?

அமைச்சர் செந்தில் பாலாஜி:

நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை முதல்வர் விரைவில் துவக்கி வைக்க உள்ளார். உளுந்துார்பேட்டை விவசாயிகளும் இந்த திட்டத்தில் பயன்பெற உள்ளனர். உளுந்துார்பேட்டையில் 4,554 விவசாயிகள், மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X