பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் பல்கலை வி.சி.,யை தேர்வு செய்ய தேடல் குழு

Added : செப் 09, 2021
Share
Advertisement
சென்னை:தஞ்சை தமிழ் பல்கலைக்கு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடல் குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.தஞ்சாவூர் தமிழ் பல்கலை துணைவேந்தர் பாலசுப்ரமணியனின் பதவிக்காலம், இந்த மாதத்துடன் முடிகிறது. எனவே, புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கு, கவர்னர் தரப்பில் தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.கவர்னர் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், அரசு பிரதிநிதியாக

சென்னை:தஞ்சை தமிழ் பல்கலைக்கு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடல் குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.தஞ்சாவூர் தமிழ் பல்கலை துணைவேந்தர் பாலசுப்ரமணியனின் பதவிக்காலம், இந்த மாதத்துடன் முடிகிறது. எனவே, புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கு, கவர்னர் தரப்பில் தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கவர்னர் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், அரசு பிரதிநிதியாக பேராசிரியர் ராஜேந்திரன், செனட் பிரதிநிதியாக ஜெயதேவன், சிண்டிகேட் பிரதிநிதிகளாக பேராசிரியர்கள் செல்வம், பத்மநாபன் ஆகியோர் நியமிக்கப் பட்டு உள்ளனர்.குழுவின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் அதிகாரியாக, சென்னை மருத்துவ கல்லுாரி உடற்கூறியல், இணை பேராசிரியர் டாக்டர் ஸ்ரீவித்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள், அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தபால் மற்றும் tamilvcsearch21@gmail.com என்ற இ- - மெயில் முகவரிக்கு, அக்., 7க்குள் அனுப்ப வேண்டும். விபரங்களை, www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X