போலீஸ் செய்திகள்

Added : செப் 09, 2021
Share
Advertisement
கொலுசு திருடியவர் கைதுசிவகாசி : திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியை சேர்ந்தவர் முத்துலட்சுமி 41. இவரது வீட்டில் பீரோவில் இருந்த வெள்ளி கொலுசை ,பாண்டியன் நகரை சேர்ந்த மாரிச்செல்வம் 34 , திருடினார் . திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்தனர்...........புகையிலை விற்ற 10 பேர் கைதுசிவகாசி: சிவகாசி ,திருத்தங்கல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டிக்கடைகளில் விற்பனை

கொலுசு திருடியவர் கைதுசிவகாசி : திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியை சேர்ந்தவர் முத்துலட்சுமி 41. இவரது வீட்டில் பீரோவில் இருந்த வெள்ளி கொலுசை ,பாண்டியன் நகரை சேர்ந்த மாரிச்செல்வம் 34 , திருடினார் . திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்தனர்...........புகையிலை விற்ற 10 பேர் கைதுசிவகாசி: சிவகாசி ,திருத்தங்கல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டிக்கடைகளில் விற்பனை செய்த நாரணாபுரம் முனியசாமி 32 , விஜயலட்சுமி காலனி முருகன் 40, ஆலாவூரணி இளையராஜா 42 , போஸ் காலனி மணிகண்டன் 25 , திருத்தங்கல் ஜெயசீலி 59 , வேல்சாமி 55 , வினோத்குமார் 28 , சாமிபுரம் காலனி ஆனந்தராஜ் 29, சித்துராஜபுரம் மாரிராஜன் 22 , முத்துராமலிங்கபுரம் காலனிய குட்ட மணி 26 ,ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 26 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.............பஸ்சில் பெண்களிடம் நகை திருட்டு

விருதுநகர்: சங்கரன் கிணத்து தெரு ஸ்டெல்லா மார்க்ரெட் 52 , பாண்டியன் நகரிலிருந்து பஸ்சில் விருதுநகர் வந்தார். பஸ்சில் இருந்து இறங்கி போது கழுத்தில் இருந்த 2 அரை பவுன் தங்க செயினை கூட்ட நெரிசலில் திருடி சென்றது தெரிந்தது.

* ஒண்டிப்புலிநாயக்கனுாரை சேர்ந்தவர் அமராவதி 60. பஸ்சில் விருதுநகர் வந்தார். இறங்கி பார்த்த போது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க செயின் நெரிசலில் திருட்டு போனது.* அருப்புக்கோட்டை பெரியகட்டான்குடியை சேர்ந்தவர் சந்தியா 22. பஸ்சில் அருப்புக்கோட்டை வந்தார். பேக்கில் வைத்திருந்த மூன்றரை பவுன் நெக்லஸ், இரண்டரை பவுன் செயின், 2 பவுன் செயினை காணவில்லை .அந்தப்பகுதி போலீசார் விசாரிக்கின்றனர்............மாற்றுதிறனாளி பலிசாத்துார்: ஆலங்குளம் அடுத்த சாமிநாதபுரம் மாற்றுத்திறனாளி காளிமுத்து 32. செப்.3 ல் செந்தட்டியாபுரம் சென்றுவிட்டு மாலை 4:00 மணிக்கு 3 சக்கர டூவீலரில் ஊர் திரும்பினார். கம்மாபட்டி - ஆலங்குளம் மெயின் ரோடு வளைவில் திரும்பிய போது நிலை தடுமாறி விழுந்து காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்..........போலீசில் காதல் ஜோடி

விருதுநகர்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் விருப்பாச்சியை சேர்ந்தவர் அகல்யா. விருதுநகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன்.இவர் கோட்டைப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இருவரும் வெகுநாட்களாக காதலித்து வந்தனர். பெண் வீட்டார் வேறு இடத்தில் வரன் பார்த்ததால் அகல்யாவும் ஜெகதீசனும் திருமணம் செய்து கொண்டனர். காதல் ஜோடி இருவரும் பாதுகாப்பு வேண்டி விருதுநகர் எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர்.............பெண்ணிடம் நுாதன திருட்டு

விருதுநகர் : கூரைக்குண்டு பாலாஜி நகரை சேர்ந்த ராஜாராம் மனைவி முனீஸ்வரி 30. நேற்று காலை இவரது வீட்டிற்கு வந்த சின்னமூப்பன்பட்டியை சேர்ந்த கடற்கரை 50, கருப்பசாமி 28 ,இருவரும் அன்னதானத்திற்கு காசு கேட்டுள்ளனர். முனீஸ்வரி காசு இல்லை என கூற, தண்ணீர் கேட்டனர். மந்திரங்கள் கூற சொல்லி கையில் இருந்த 3 கிராம் எடை வெள்ளை கல் மோதிரத்தை சொம்பில் போட செல்லி அதை எடுத்து சென்றனர். முனிஸ்வரியின் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் இருவரையும் பிடித்து சூலக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X