தமிழ்நாடு

செப்டிக்டேங்க் கழிவு, குப்பை எல்லாமே இங்குதான்... * குறட்டை விடும் பொதுப்பணித்துறையால் அலங்கோலம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
விருதுநகர்-விருதுநகர் வேலுச்சாமி நகர் வழியாக செல்லும் நீர்வரத்து கால்வாய் செப்டிக்டேங்க் கழிவு ,குப்பை கொட்டைப்பட்டு கழிவுநீர் ஒடையாக மாறி வருகிறது. ஆக்கிரமிப்புகளால் கால்வாயின் நடுப்பகுதி மண் மேவி மாயமான நிலையில், துாக்கத்திலே பொழுதை கழிக்கும் பொதுப்பணித்துறை இன்றளவும் இதை துார்வார எள்ளளவும் நடவடிக்கை எடுக்காது அலட்சியம் காட்டுகிறது. இதனால்

விருதுநகர்-விருதுநகர் வேலுச்சாமி நகர் வழியாக செல்லும் நீர்வரத்து கால்வாய் செப்டிக்டேங்க் கழிவு ,குப்பை கொட்டைப்பட்டு கழிவுநீர் ஒடையாக மாறி வருகிறது.

ஆக்கிரமிப்புகளால் கால்வாயின் நடுப்பகுதி மண் மேவி மாயமான நிலையில், துாக்கத்திலே பொழுதை கழிக்கும் பொதுப்பணித்துறை இன்றளவும் இதை துார்வார எள்ளளவும் நடவடிக்கை எடுக்காது அலட்சியம் காட்டுகிறது. இதனால் மழைக்காலங்களில் குடியிருப்புகளை சூழும் மழை நீரால் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்

இப்பகுதியினர்.விருதுநகர் சத்திரரெட்டியபட்டி கண்மாயில் நிரம்பும் நீர் அதன் மறுகால் வழியாக விருதுநகர் ரயில்வே லைன் கிழக்கு பகுதியில் உள்ள 30 அடி அகல கால்வாய் வழியாக வெளியேற துவங்குகிறது. சத்திரரெட்டியபட்டி, என்.ஜி.ஓ.,காலனி ரயில்வே பாலம் வழியாக ரயில்வே லைனின் மேற்கு பகுதி வந்து என்.ஜி.ஒ., காலனி, டி.கே.எஸ்.பி.,நகர், வேலுச்சாமி நகர், பி.ஆர்.சி., டெப்போ, கணேஷ்நகர் முகப்பு, நான்குவழிச்சாலை மேம்பாலம் வழியாக கவுசிகா ஆற்றில் போய் கலக்கிறது.ரயில்வே லைன் மேற்கு பகுதியில் வரும் போது கால்வாய் யொட்டி குடியிருப்புகள் அதிகமாக உள்ளன.

இதனால் இப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து 30 அடி கால்வாயானது 5 அடி அகல ஓடையாக மாறிவிட்டது.இக் கால்வாய் சத்திரரெட்டியபட்டியில் இருந்து விருதுநகர் என்.ஜி.ஓ., காலனி பகுதிக்குள் நுழையும் போது பல இடங்களில் மண்மேவியும், கருவேல மரங்களால் புதர்மண்டியும் கால்வாயில் இடைப்பட்டபகுதியை காணவில்லை. இதனால் தாழ்வாக உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் மழைக்காலங்களில் நீர்தேங்கி மீண்டும் வரத்துகால்வாயில்வருகிறது. இக்கால்வாய் குடியிருப்பு பகுதி வழியாக வருவதால், வீடுகளின் கழிவுநீர், செப்டிக் டேங்க் கழிவு,குப்பையை சுமந்தப்படி வருகிறது. இதில் பலர் கால்வாயில் செப்டிக் டேங்க் அமைத்து அதன் கழிவுகளை நேரடியாக கால்வாயில் விடுகின்றனர். இதனால் நன்னீர் ஓடை கழிவுநீர் ஓடையாகி விட்டது.

கோரைப்புற்கள், கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளதால் நீர் தடைப்பட்டு ஆங்காங்கு தேங்கியே நிற்கிறது. குடியிருப்போர் கொசுத்தொல்லையால் நித்தம் அவதிப்படுகின்றனர்.இன்னொரு பக்கம் விஷப்பூச்சிகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. கால்வாய் சுருங்கியதால் கன மழையில் நீர் செல்வதில் தடை ஏற்பட்டு குடியிருப்புகளை சூழ்கிறது.வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது.2018ல் பெய்த கனமழைபோது பி.ஆர்.சி., பணிமனை டெப்போ நிறைந்ததுடன், வேலுச்சாமி நகர் குடியிருப்புகள் மழை நீரில் முழ்கின.2020ல் தொடர் மழை பெய்த போதும் குடியிருப்புகளை யொட்டி மழைநீர் சென்றன. இந்தாண்டும் மழைக்காலம் துவங்கும் முன் நீர்வரத்து கால்வதயை துார்வாரினால் மட்டுமே இதற்கு தீர்வு பிறக்கும்.

இதை நன்கு அறிந்தும் பொதுப்பணித்துறையினர் தொடர் துாக்கத்தில் உள்ளனர்.இதன் அலுவலகம் அருகே உள்ள வரத்து கால்வாயை கண்டுக்காத துறை அதிகாரிகள் மற்றப்பகுதி நீர்நிலைகள்,வரத்துகால்வாய்கள் மீது எந்தளவிற்கு கண்காணிக்கின்றனர் என்பதற்கு இதுவே ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது.விருதுநகரின் கவுசிகா நதிக்கு செல்லும் பிரதான நீர்வரத்து கால்வாய் என்பதால் பொதுப்பணித்துறையினருக்கு மாவட்ட நிர்வாகம்தான் கண்டிப்பான போதிய அறிவுரைகளை வழங்க வேண்டும் .விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகம்கவுசிகா நதிக்கு செல்லும் முக்கிய கால்வாய் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமலும், பராமரிப்பு இல்லாமலும் உள்ளது. இதனால் கவுசிகா நதிக்கும், அங்கிருந்து குல்லுார்சந்தை அணைக்கும் நீர் செல்வது தடைபடுகிறது. கால்வாயில் தேங்கும் நீரில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரானது மழைக்காலங்களில் குடியிருப்புக்குள் புகுகின்றன.

இதனால் மழைநீருடன் வீட்டுக்கள் விஷப்பூச்சிகளும் வருகிறது. வீடுகளில் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கின்றனர்.ராஜேந்திரன், செயலாளர், வேலுச்சாமிநகர் குடியிருப்போர் சங்கம்.மீட்டெடுக்க வேண்டும்வரத்து பாதை சரியில்லாததால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுகிறது. வெறும் கழிவுநீர் மட்டுமே தற்போது தேங்கி நிற்பதால் ஆழ்துளை கிணற்றுக்குள் கழிவுநீர் செல்ல இதன் நீரை பயன்பாடுத்த முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் 700 குடும்பங்கள் பாதிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வரத்து கால்வாயை துார்வார வேண்டும். மண்மேவி காணாமல் போன பகுதிகளை கண்டறிந்து நீர்வரத்து ஓடையை மீட்டெடுக்க எடுக்க வேண்டும்.ஜீத், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர், பா.ஜ.,கொசுத்தொல்லை தாங்கல தேங்கி நிற்கும் கழிவுநீரால் அதிகளவில் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய் அபாயங்கள் ஏற்பட்டுள்ளன. நிலையான நீரோட்டம் இருந்தாலே ஓடை நன்னீர் ஓடையாக இருந்திருக்கும். தற்போது கழிவுநீரால் கோரைப்புற்கள் வளர்ந்தும், ஆக்கிரமிப்புகளால் நீர்வரத்து கால்வாயின் சுகாதாரத்தை சீர்குலைக்கிறது. மாவட்ட நிர்வாகம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆ.மாரியம்மாள்,குடும்பத்தலைவி, வேலுச்சாமிநகர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

கால்வாய் வழித்தடத்தை மீட்டு ,துார்வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கால்வாயில் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையுடன் இணைந்து அகற்றவும் வழிவகை செய்யப்படும். ராஜா, செயற்பொறியாளர், வைப்பாறு வடிநில கோட்டம், பொதுப்பணித்துறை.உரிய நடவடிக்கைவரத்து கால்வாயை துார்வாரவும்,மாயமான இடைப்பிட்ட கால்வாயை மீட்க, சம்மந்தப்பட்ட துறையினரிடம் அறிவுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ஜெ.மேகநாதரெட்டி, கலெக்டர், விருதுநகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X