பொது செய்தி

தமிழ்நாடு

தெருநாய்களுக்கு கருத்தடையுடன் தடுப்பூசி ; கலெக்டர் அறிவுறுத்தல்

Added : செப் 09, 2021
Share
Advertisement
விருதுநகர்-"தெருநாய்களுக்குகருத்தடை அறுவை சிகிச்சை செய்து தடுப்பூசி போட வேண்டும்," என, கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தினார்.விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கால்நடை பராமரிப்புத்துறை திட்ட திறனாய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது: மாவட்டத்தில் மேய்ச்சல் நிலங்களை பட்டியலிட்டு அவற்றில் ஊரக வளர்ச்சி முகமையுடன் இணைந்து கால்நடை தீவன பயிர்களை பயிரிட

விருதுநகர்-"தெருநாய்களுக்குகருத்தடை அறுவை சிகிச்சை செய்து தடுப்பூசி போட வேண்டும்," என, கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தினார்.விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கால்நடை பராமரிப்புத்துறை திட்ட திறனாய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது: மாவட்டத்தில் மேய்ச்சல் நிலங்களை பட்டியலிட்டு அவற்றில் ஊரக வளர்ச்சி முகமையுடன் இணைந்து கால்நடை தீவன பயிர்களை பயிரிட வேண்டும். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை போக்கப்படும்.விலங்குகள் வதை தடுப்புச்சங்கத்தின் நோக்கம், விழிப்புணர்வு குறித்து கால்நடை வளர்ப்போரிடமும், பொதுமக்கள் இடையே கொண்டு செல்ல விரிவாக்க பணிகளை அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து செய்ய வேண்டும்.தெருக்களில் சுற்றி திரிந்து வியாதிகளை பரப்பும் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்து தடுப்பூசி போடுவதோடு, விலங்கின ஆர்வலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள முறையாக திட்டமிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.சாத்துார் ஆட்டுப்பண்ணையில் துவங்க இருக்கும் கால்நடை தீவன பயிர் வளர்ப்பு திட்டத்தை, முறைப்படி ஒப்பந்தப்புள்ளி கோரி இயக்குனரக உத்தரவு படி பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் கால்நடை மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்துகள், சிகிச்சை மருந்துகள் போதிய அளவிற்கு இருப்பில் வைக்கவும், முகாம்கள் நடத்தி கால்நடைகளை பாதுகாத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.மண்டல இணை இயக்குனர் கோயில்ராஜா, உதவி இயக்குனர்கள் ராஜராஜேஸ்வரி, கார்த்திகேயன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X