பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கரி மாயம்: துாத்துக்குடியில் ஆய்வு

Added : செப் 09, 2021
Share
Advertisement
சென்னை:துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில், 71 ஆயிரம் டன் நிலக்கரி மாயமானது குறித்து, மின் வாரிய உயரதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.தமிழக மின் வாரியத்திற்கு, திருவள்ளூர் மாவட்டத்தில், வட சென்னை என்ற பெயரிலும்; துாத்துக்குடி துறைமுகம் அருகில், துாத்துக்குடி பெயரிலும் அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், மின் உற்பத்திக்கு எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது.

சென்னை:துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில், 71 ஆயிரம் டன் நிலக்கரி மாயமானது குறித்து, மின் வாரிய உயரதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.

தமிழக மின் வாரியத்திற்கு, திருவள்ளூர் மாவட்டத்தில், வட சென்னை என்ற பெயரிலும்; துாத்துக்குடி துறைமுகம் அருகில், துாத்துக்குடி பெயரிலும் அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், மின் உற்பத்திக்கு எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி பெறப்படும் நிலையில், பற்றாக்குறைக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகிறது.

வட சென்னை மின் நிலையத்தில் பதிவேட்டில் உள்ள இருப்பிற்கும், இருப்பில் உள்ள அளவுக்கும், 2.38 லட்சம் டன் நிலக்கரி குறைவாக உள்ளது. துாத்துக்குடி மின் நிலையத்திலும், 71 ஆயிரத்து, 857 டன் நிலக்கரி மாயமாகிஉள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்ய, மின் வாரிய உயரதிகாரிகள் அடங்கிய தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில், மின் தொடரமைப்பு கழக நிர்வாக இயக்குனர் சண்முகம், மின் பகிர்மான கழக இயக்குனர் சிவலிங்கராஜன் ஆகியோர், நேற்று துாத்துக்குடி மின் நிலையத்திற்கு சென்று, நிலக்கரி இருப்பு, வரத்து உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X